பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (SEZ - Special Economic Zones) வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH) அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகச் சமீபத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முடிவு பற்றி விளக்கமளித்த அமைச்சர் பியூஷ் கோயல், சிறிய நகரங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக் WFH கலாச்சாரம் பெரிதும் உதவும் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
புதிதாக மறுசீரமைக்கப்பட்ட வர்த்தக வாரியத்தின் ( Board of Trade) முதல் கூட்டத்திற்கு கோயல் தலைமை தாங்கினார், இது ஊக்கமளிக்கும் நோக்கங்களை அடைவதற்காக வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (FTP) தொடர்பான கொள்கை நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.
இந்த வர்த்தக வாரிய கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், கோவிட் தீவிரமாக இருந்த காலங்களில் SEZ யூனிட்களில் வேலை பார்த்த ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தோம். இது அனைவராலும் பாராட்டப்பட்டது, மேலும் நல்ல பலன்களையும் கொடுத்தது என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க விரும்பும் பிரிவுகள், ஒரு திட்டத்தை உருவாக்கிச் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு ஆணையர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என வணிக அமைச்சகம் கூறியிருந்தது.
Also Read : stock market : அதிக லாபம் வேண்டுமா? இதில் தைரியமா முதலீடு செய்யுங்கள்!
இதனிடையே இந்த ஆண்டு ஜூலையில் SEZ-ல் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவின் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வணிக அமைச்சகம் அனுமதி அளித்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட யூனிட் SEZ களில் உள்ள மொத்த ஊழியர்களில் 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்ய அமைச்சகம் அனுமதித்த சில மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது SEZ யூனிட்டில் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு WFH ஆப்ஷன் அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Work From Home