ஹோம் /நியூஸ் /வணிகம் /

விமான எரிபொருளுக்கான கலால் வரி 3 சதவீதம் குறைப்பு

விமான எரிபொருளுக்கான கலால் வரி 3 சதவீதம் குறைப்பு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, விமான எரிபொருளுக்கான கலால் வரியை 11 விழுக்காடாக மத்திய அரசு குறைத்துள்ளது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான நிறுவனங்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு நிலைமையைச் சமாளிக்கும் வகையில் விமான எரிபொருளுக்கான கலால் வரியை 14 விழுகாட்டில் இருந்து  11 விழுகாடாக குறைத்துள்ளது.

  மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் விமான எரிபொருள் 74 ரூபாய் 56 காசுகளாக குறைந்துள்ளது. இது டெல்லியில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட குறைவானதாகும்.

  மேலும் இது குறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய வரி விகிதம் அக்டோபர் 11-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே அக்டோபர் 4-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியும் லிட்டருக்கு ரூ.1.5 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  ALSO READ...

  பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வெறும் கண்துடைப்பு - ப.சிதம்பரம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Central government, Excise duty, Excise duty decreased, Fuels Tax, Petrol Diesel tax