வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை

ஆதார் எண்ணை தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதோடு சேர்த்து, கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

Web Desk | news18
Updated: July 22, 2019, 9:39 PM IST
வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை
ஆதார் எண் கட்டாயம்
Web Desk | news18
Updated: July 22, 2019, 9:39 PM IST
அதிக பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஆதார் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால்,  பான் எண்ணை குறிப்பிட வேண்டிய நடைமுறை தற்போது உள்ள நிலையில், வெறும் பான் எண்ணை மட்டும் குறிப்பிடும் தற்போதைய சூழ்நிலையில், போலியாக பான் எண்ணை தெரிவித்து அதிகமான பணபரிவர்த்தனையை சிலர் செய்வது யார் என்று கூட காணமுடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் தெரிவித்தால், பணம் யார் டெபாசிட் செய்வது என்று கண்டறியப்படும் என கூறப்படுகிறது.


ஆதார் எண்ணை தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதோடு சேர்த்து, கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெபாசிட் செய்யப்படும் தொகை வரம்பு குறித்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், ஆண்டுக்கு ₹ 20 லட்சம் அல்லது  ₹ 25 லட்சம் பணம்  டெபாசிட் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

Also Watch: பிகில் லீக்கானது எப்படி?

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...