• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தீபாவளிக்கு முன் மூன்று போனஸ்... அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்

தீபாவளிக்கு முன் மூன்று போனஸ்... அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மகிழ்ச்சியான செய்திகள் வெளியாக உள்ளது.

  • Share this:
    தீபாவளி என்றாலே பொதுவாக நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் தான். ஆனால் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி என்றால் சற்றென்று நினைவுக்கு வருவது போனஸ் தான். இந்த வருடம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி 2021 க்கு முன்னதாக மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து போனஸ் பெறலாம்.

    அகவிலைப்படி உயர்வு

    தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு அகவிலைப்படி (டிஏ) உயர்வை அறிவிக்கவில்லை. இருப்பினும், அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு (AICPI) ஜனவரி முதல் மே 2021 வரையிலான தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%அதிகரிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. அறிக்கைகள் உண்மையாக இருந்தால் தீபாவளி 2021 இல் அரசு அகவிலைப்படியை அதிகரிக்கலாம்.

    Also read : ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க பெஸ்ட் வங்கி எது? ஒரு லிஸ்டே இருக்கு!

    அகவிலைப்படி நிலுவை தொகை

    ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 மாதத்திற்கான அதிகரித்த அகவிலைப்படியை (டிஏ) மத்திய அரசு இன்னும் செலுத்தவில்லை. ஜூலை 2021 முதல் அதிகரித்த அகவிலைப்படியுடன் மத்திய அரசு சம்பளத்தைப் பெறும் என்று நிதி அமைச்சகம் முன்பு அறிவித்தது. செப்டம்பர் 2021 முதல் சம்பளம், அதாவது அவர்கள் இப்போது அகவிலைப்படி நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கலாம்.

    பிஎஃப் வட்டி

    ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 6 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்களும் தீபாவளிக்கு முன்பாக ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். EFPO சந்தாதாரர்கள் தங்கள் முதலீடுகளுக்கான வட்டிப் பணத்தை சமூகப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: