ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம்: செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் நல சங்கம் போராட்டம் அறிவிப்பு

ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம்: செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் நல சங்கம் போராட்டம் அறிவிப்பு

ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் ரீசார்ஜ் அனைத்தையும் ஒருநாள்  மட்டும் விற்க மாட்டோம் என திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் &  சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஏர்டெல் நிறுவனம் விற்பனையாளர்களையும் டிஸ்ட்ரிபியூட்டர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் இதனை கண்டித்து மாநில தழுவிய போராட்டம் நடத்தப்போவதாகவும் ஒருநாள் ஏர்டெல் நிறுவன  பொருட்களை விற்க மாட்டோம் என்றும் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் நலம் சங்கம்  சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளில் மற்றும் கிராமப்புறங்களில் 10000க்கும் மேற்பட்ட செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடைகள் உள்ளன. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது நாளொன்றுக்கு இரண்டு சிம் கார்டுகள் விற்பனை செய்தால் மட்டுமே ரீசார்ஜ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் ஆகியோருக்கான சேவை மைய எண்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கக் கூடிய சேவையை விற்பனையாளர்களுக்கு நிறுத்தியுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

  மேலும், விற்பனையாளர்களையும் டிஸ்ட்ரிபியூட்டர்களையும் வணிகத்தையும்  அவமதித்து நேரடியாக  அனுமதியின்றி தெரு ஓரங்களில்  குடை போட்டு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சிம் கார்டுகளை விற்பனை செய்வதாக கூறும் அவர்கள்,  இவ்வாறு சிம் கார்டுகளை நேரடியாக  விற்பனை செய்யும்போது  வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல்  அவர்களின் பெயரில்  2 அல்லது 3  சிம்கார்டுகளை  அக்டிவேட் செய்து குற்ற செயல்களில்  ஈடுபடுவோருக்கு விற்பனை செய்து துணை போவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  மேலும் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் சில்லரை வியாபாரிகள் நசுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் இத்தகைய செயல்களை கண்டித்து ஏர்டெல் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் ரீசார்ஜ் அனைத்தையும் ஒருநாள்  மட்டும் விற்க மாட்டோம் என திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் &  சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க: மதுரை-தேனி சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம்.. தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு

  ஏர்டெல் நிறுவனத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இத்தகைய போராட்டம் நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடைகள் நலசங்கம் நல சங்கம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Airtel