பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகிறதா பட்ஜெட்?

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகிறதா பட்ஜெட்?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 8, 2020, 11:15 PM IST
  • Share this:
2020 - 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன. இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசு உள்ளது.

ஜனவரி 31-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.


முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11-ம் தேதி வரையிலும், இரண்டாம் கூட்டத் தொடர் மார்ச் 2-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Also see:
 
First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்