சமீப காலமாக ஆன்லைன் விற்பனை மிகவும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் என்று ஆன்லைன் பெரு வணிக நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றது. உணவு பொருட்கள் முதல், ஒரு எலெக்ட்ரானிக் ப்ராடக்டுக்கான உதிரி பாகங்கள் முதல் டிவி, குளிர்சாதனப்பெட்டி, மொபைல் என்று ஆன்லைனில் கிடைக்காத பொருளே இல்லை. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ஆன்லைனில் அதிக டிமாண்ட் உள்ளது.
கடைகளில் கிடைப்பதை விட ஆன்லைனில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஆன்லைனில் கொஞ்சம் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். கடையில் ஒரு பொருளை வாங்கினால் அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அல்லது குறை இருந்தால் நாம் உடனடியாக நேரடியாக சென்று அதை மாற்றிக்கொள்ள முடியும். அதே போல ஆன்லைனிலும் ரிட்டர்ன் மற்றும் அதற்கு மாற்று பொருளை கொடுப்பதற்கான தேர்வுகள் உள்ளன.
ஆன்லைன் விற்பனை தானே என்று எந்த பொருளை எப்படி வேண்டுமானாலும் விற்கலாம் என்று எந்த நிறுவனமும் செயல்பட முடியாது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஆன்லைன் விற்பனைக்கும் பொருந்தும். அந்த வகையில் CCPA என்று கூறப்படும் பொது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமேசான் நிறுவனத்திற்கு சமீபத்தில் ₹1,00,000 அபராதம் விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறி ஆன்லைனில் வீட்டு உபயோகத்துக்கான பிரஷர் குக்கர் விற்பனை செய்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக CCPA தெரிவித்து உள்ளது. அதேபோல மற்ற முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனையையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் இதுவரை 2,265 பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளது. எனவே நிறுவனம் விற்பனை செய்த அனைத்து நுகர்வோர்களுக்கும் அறிக்கை தெரிவித்து அத்தனை குக்கர்களையும் உடனடியாக திரும்ப பெற்று, அதற்கான தொகையையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதை செய்ததற்கான இணக்க அறிக்கையை 45 நாட்களுக்குள் CCPAவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. குவாலிட்டி கண்ட்ரோல் ஆர்டர்களின் விதிமுறைகளைப்படி ஆன்லைனில் பிரஷர் குக்கர் விற்பனை என்பது விதிமீறல் ஆகும். எனவே இதற்காக ₹1,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read : Tokenization Security | டோக்கனைசேஷன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?
கட்டாயமாக்கப்பட்ட தர நிலைகளின் அடிப்படையில் குக்கரின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி ஈகாமர்ஸ் தளங்கள் மற்றும் CCPA உடன் பதிவு செய்துள்ள ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு, பொது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே Paytm Mall குறைபாடுள்ள குக்கர்களை விற்க அனுமதித்ததை கண்டறிந்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், விற்பனையான அனைத்து குக்கர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று Paytm Mallக்கு உத்தரவிட்டு, நுகர்வோர்களுக்கு அவர்கள் செலவிட்ட தொகையை திரும்ப செலுத்தவும், அபராதமாக ₹1,00,000 கட்ட வேண்டும் என்றும் கூறியது.
Also Read : இந்தியாவின் மிக பெரிய பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் பற்றி தெரியுமா?
உரிய ISI முத்திரை இல்லாத மற்றும் கட்டாயமாக்கப்பட்ட BIS தர நிலைகளை மீறும் எந்த பொருளாக இருந்தாலும் அது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வழியாக விற்பனை செய்யக்கூடாது. எனவே இந்த பொருட்கள் விற்பனை ஆகிறதா என்று அனைத்து தளங்களிலும் CCPA ஆய்வு செய்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.