ஹோம் /நியூஸ் /வணிகம் /

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்தியா - காரணம் என்ன?

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்தியா - காரணம் என்ன?

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம்

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம்

ஆண்ட்ராய்டில் ப்ளே ஸ்டோர், கூகுள் சர்ச், கூகுள் குரோம், யு-டியூப் ஆகிய செயலிகளை கூகுள் நிறுவனம் முன்கூட்டியே நிறுவப்பட்டு விற்பனைக்கு வருவதால் கூகுள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்துக்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கார்ப்ரேட் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) இந்த அமைப்பு நாட்டின் பெருநிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியாமான முறையில் தொழில் செய்கிறதா என்பதை கண்காணித்து ஒழுங்குமுறை படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சிசிஐ அமைப்பு உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது.

  உலகின் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் செல்போன்களுக்கான ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை நடத்தி வருகிறது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில், கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர், கூகுள் சர்ச், கூகுள் குரோம், யு-டியூப் ஆகிய செயலிகளை கூகுள் நிறுவனம் முன்கூட்டியே நிறுவப்பட்டு விற்பனைக்கு வருவதால் கூகுள் நிறுவனத்தின் போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாக சிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: அசத்தும் டிஜிட்டல் பேமெண்ட்.. அதிகரிக்கும் பண்டிகைக் கால விற்பனை மற்றும் தேவை..

  இதனால் பிற நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுவதோடு வணிகத்தில் ஆரோக்கியமான போட்டி சூழல் இல்லாமல் போகிறது. எனவே, விதிமுறைகளை மீறி செயல்பட்ட கூகுள் நிறுவனத்திற்கு 1,337 ரூபாய் அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதத்தை அடுத்த 30 நாள்களுக்குள் செலுத்தி நிதி பரிவர்த்தனை குறித்த உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் அல்லது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என சிசிஐ எச்சரித்துள்ளது. மேலும், இதுபோன்ற முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் சி.சி.ஐ அமைப்பு தெரிவித்துள்ளது. கூகுளைப் போலவே, MakeMyTrip, Goibibo மற்றும் OYO ஆகிய நிறுவனங்களுக்கும் சிசிஐ அமைப்பு மொத்தம் ரூ.392 கோடி அபராதம் விதித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corporate, Google