முகப்பு /செய்தி /வணிகம் / ப்ரீ-பேக்கேஜிங்கில் வரும் பொருட்கள் மீதான GST வரி - விளக்கம் அளித்தது CBIC.!

ப்ரீ-பேக்கேஜிங்கில் வரும் பொருட்கள் மீதான GST வரி - விளக்கம் அளித்தது CBIC.!

GST

GST

GST on Pre-Packaged items | மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) GST விகிதங்கள் மாறுதல் பற்றிய விளக்கங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அந்த விளக்கங்கள் இங்கே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

GST வரிகளில் மாற்றம் செய்யப்படவிருக்கும் செய்தி வெளியான உடனேயே, பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து 47வது ஜிஎஸ்டி கவுன்சில் சண்டிகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் முடிவு செய்தது. அதை தொடர்ந்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. CBIC ஆல் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெளிவில்லாமல் இருந்ததாக பல தரப்பிலும் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ளப்படலாம் என்றும் கருத்துகள் வெளியான நிலையில், CBIC விளக்கத்தை அளித்துள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) GST விகிதங்கள் மாறுதல் பற்றிய விளக்கங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அந்த விளக்கங்கள் இங்கே. முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் என்பது அளவியல் சட்டம், 2009 பகுதி (1), பிரிவு-2 இன் கீழ் வரும் அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபில் இடப்பட்ட பொருட்களை குறிக்கும். லீகல் மெட்ராலஜி சட்டத்தின் கீழ் "ப்ரீ-பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள்" என்பது வாங்குபவர் தவர்த்து, சீல் வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், எந்த வகையான பேக்கேஜில் வைக்கப்பட்டாலும், அதில் உள்ள பொருள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அளவை கொண்டிருக்கும்.

25 கிலோ வரையிலான அனைத்து ப்ரீ-பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

25 கிலோவுக்கு மேல் ஒரே பாக்கெட்டில் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சிபிஐசி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இறுதி நுகர்வோருக்கு, சில்லறை விற்பனையை நோக்கமாக கொண்டுள்ள வணிகர்கள், பல பேக்கேஜ்களை, அதாவது ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள 10 பேக்கேஜ்களை ஒரே பெரிய பேக்கில் விற்பனை செய்தால், அதற்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படாது என்றும், வரிக்கு உட்பட்ட விற்பனை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டது. அத்தகைய பேக்கேஜ், உற்பத்தியாளரால் ஒரு விநியோகஸ்தர் மூலம் சில்லறை வணிகர்களுக்கு விற்கப்படலாம்.

Also Read : 3 ஆண்டுகளில் நல்ல ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் முதலீடு!

உதாரணமாக, 2011 லீகல் மீட்டராலாஜி விதிகளின், விதி 24 படி, ஒரு சில பொருட்களுக்கு அளவீடுகள் படி வரி கட்டாயம் என்றாலும், 50 கிலோ கொண்ட அரிசி மூட்டை அல்லது பேக்கேஜ் என்பது ஜிஎஸ்டி வரி விதிக்கும் நோக்கங்களுக்காக, ப்ரீ-பேக்கேஜ் செய்யபப்ட்டு மற்றும் பெயரிடப்பட்ட பொருளாக கருதப்படாது.

தொழில்துறை நுகர்வோர் (industrial consumers) அல்லது நிறுவன நுகர்வோர்களின் (Institutional consumers) பயன்பாட்டுக்காக வழங்கப்படும் ப்ரீ-பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள், மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்றும் CBIC தெளிவுப்படுத்தியுள்ளது. எனவே ஜிஎஸ்டி வரிகள் சேர்க்கப்படாது.

Also Read : அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஒரு பொருளின் உற்பத்தியாளர், மொத்த விநியோகஸ்தர், டீலர் மற்றும் சில்லறை விற்பனையாளருக்கு வழங்கினால், அதற்கு ஜிஎஸ்டி பொருந்தும். ஆனால் உற்பத்தியாளர், அல்லது மொத்த விற்பனையாளர் அல்லது சில்லறை விற்பனையாளர் உள்ளீட்டு வரிக் கடன் விதிகளின்படி அவரது சப்ளையர் விதிக்கும் ஜிஎஸ்டியில் இருந்து இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற உரிமை உண்டு.

First published:

Tags: GST