முகப்பு /செய்தி /வணிகம் / பணமாகக் கொடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாமா ?

பணமாகக் கொடுத்தால் செலவை மிச்சப்படுத்தலாமா ?

பணகொடுத்து செலவு செய்வதால் சேமிப்பா?

பணகொடுத்து செலவு செய்வதால் சேமிப்பா?

ஐந்து முறை 20 காசுகள் என்றால் கூட 1 ரூபாய் லாபம் தானே.  அது சேமிப்பு தானே.

  • Last Updated :

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு ஊசி வாங்க கூட ஆன்லைன் பேமெண்ட் முறையைத் தான் பயன்படுத்துகிறோம். நமது கணக்கில் எவ்வளவு இருக்கிறது எவ்வளவு செலவாகிறது என்பதே நமது கண்ணுக்கு தெரியாமல் போய்விடுகிறது. பணம் செலுத்திய பிறகு வரும் செய்தியில் எத்தனை பேர் மிச்ச பணத்தை கவனிக்கிறோம். குறைவு தான்.

ஆன்லைன் பேமெண்ட் பயன்படுத்துவதால் கையில் எப்போதும் பணம் வைத்திருக்க தேவை இல்லை. திருட்டு பயம் இருக்காது. கையில் ஒரு போன் அல்லது கார்டு இருந்தால் போதும். எவ்வளவு வாங்கினாலும் அதற்கான காசை ஒரு நிமிடத்தில் செலுத்தி விடலாம். லட்சக்கணக்கில் வாங்கும் நகைகளுக்கும் ஒரு ஸ்வைப் போதும். 

இவ்வளவு வசதியாக இருப்பதில் என்ன குற்றம் என்று கேட்கிறீர்களா? வசதி இருக்கும் இடத்தில் தான் காசு சீக்கிரம் கரையும். ஒரு பொருளுக்கு நம் கையில் காசு எண்ணித் தரும் பொழுது எவ்வளவு மீதம் உள்ளது, இன்னும் எதுவெல்லாம் வாங்க வேண்டும். அதற்கான காசு நம்மிடம் உள்ளதா என்று நமக்கு தெரியும். அதற்கு ஏற்றாற்போல் பார்த்து பார்த்து வாங்குவோம். அப்போது தேவை இல்லாத பொருட்களின் நுகர்வை குறைக்க முடியும்.

ஷேர் மார்க்கெட் புதுப் பங்கு வெளியீட்டு சந்தை இப்படி தான் இயங்குகிறதா?

ஒரு சிலர் கார்டில் காசு இருக்கிறது என்று அள்ளிப்போட்டுவிட்டு பணம் கட்டும் போது  பணம் இல்லாமல்  பொருட்களை வெளியில் எடுத்து வைப்பர். அல்லது கிரெடிட் கார்டை தேடுவர். இதனால் இந்த மாத சேமிப்பு தீர்ந்து போவதோடு அடுத்த மாதத்திற்காக கடனும் கூடுகிறது. மாத சம்பளத்தில் பட்ஜெட் போட்டு வாழும் குடும்பங்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஈ.எம்.ஐ போதாதென்று இதுவும் சேர்ந்துகொள்ளும். 

அதே போல் பில் தொகையில்  20 காசுகள் , 46 காசுகள் என்று வந்தால் பரிவர்த்தனையில் அதையும்  கூட சேர்த்து கழிக்கப்படும். ஆனால் நேரில் கட்டும் பொழுது அந்த காசுகளை விட்டுவிட்டு வாங்குவர். ஐந்து முறை 20 காசுகள் என்றால் கூட 1 ரூபாய் லாபம் தானே.  அது சேமிப்பு தானே.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் மாதத்தின் ஆரம்பத்தில் பட்ஜெட் போட்டு செலவுக்காக வைத்திருக்கும் தொகைக்குள் வாங்க பழகினால் தப்பலாம். கடைக்கு செல்லும் போது, இது தான் உச்ச வரம்பு என்று வைத்துக் கொண்டு செலவு செய்ய வேண்டும். சேமிப்புக்காக வைத்திருக்கும் பணத்தை வேறு ஒரு அக்கவுண்டிற்கு மாற்றிவிட்டு செலவு செய்யலாம். கையில் காசு வைத்து  செலவு செய்தால் எவ்வளவு எச்சரிக்கையோடு இருப்போமோ அந்த எண்ணம் கார்டு/ டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் இருக்க வேண்டும்.

top videos

    மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கண்டிப்பாக சேமிப்பில் இருக்க வேண்டும். அதை செலவிற்கு எடுக்கக்கூடாது என்ற பழக்கம் இருக்க வேண்டும்.

    First published:

    Tags: Cashback, Personal Finance