முகப்பு /செய்தி /வணிகம் / ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி கார்டு வேண்டாம் - ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு

ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி கார்டு வேண்டாம் - ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு

UPI வசதி மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி விரைவில் நடைமுறைபடுத்தவுள்ளது.

UPI வசதி மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி விரைவில் நடைமுறைபடுத்தவுள்ளது.

UPI வசதி மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி விரைவில் நடைமுறைபடுத்தவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் 2022-23 நிதியாண்டின் முதல் நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "தற்போது ஒரு சில வங்கி ஏடிஎம்களில் மட்டும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், UPI வசதி மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி விரைவில் நடைமுறைபடுத்தவுள்ளது.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வசதி எளிமையாகும் என்பதுடன், கார்டு இல்லா பரிவர்த்தனை மூலம் கார்டு குளோனிங், சிக்கிமிங் போன்ற வங்கி மோசடிகள் தடுக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க - சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்... மத்திய அமைச்சர் நதின் கட்கரி வேதனை

மேலும், நடப்பு காலண்டில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 4 சதவீதமாக நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

கார்டு இல்லா பணம் எடுக்கும் வசதி என்றால் என்ன?

பொதுவாக நாம் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோம். ஆனால் ஒரு சில வங்கிகள் தற்போது கார்டுகளே இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. கோவிட் தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் செல்ல அச்சம் கொண்டது இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் இந்த சேவையை தற்போது வழங்கிவருகின்றன. ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஆப் மூலம் பணம் எடுக்க ரிக்குவஸ்ட் கொடுத்தால் போதும் ஏடிஎம் இல் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நடவடிக்கையின்போது ஒவ்வொரு முறையும் மொபைலில் ரகசிய PIN நம்பர் ஜெனரேட் ஆகி அதை பரிசோதித்த பின்னரே பணம் எடுக்க முடியும் என்பதால் ஏடிஎம் மோசடிகள் பெருமளவில் குறைக்கப்படும் என நிபுணர்கள் தெபிவிக்கின்றன.

இந்த கார்டு இல்லா பரிவர்த்தனை UPI வசதியை கொண்டு செயல்படுகிறது.இந்த கார்டு இல்லா பணம் எடுக்கும் வசதிக்கும் தினசரி லிமிட் உண்டு. ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை தினசரி அளவை குறிப்பிட்ட வங்கிகள் வைத்துள்ளன. மேலும் இந்த சேவைக்கு சில வங்கிகள் தனிக் கட்டணம் வசூல் செய்கின்றன.

First published:

Tags: ATM, ATM Card, ATM services