Home /News /business /

Car loan : குறைந்த வட்டியில் வழங்கும் வங்கி இது தான்.. எப்படி விண்ணபிப்பது முழு விவரம்!

Car loan : குறைந்த வட்டியில் வழங்கும் வங்கி இது தான்.. எப்படி விண்ணபிப்பது முழு விவரம்!

கார் லோன்

கார் லோன்

Car loan 9.75 சதவீதம் முதல் 13.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது.

    Car loanல் பயன்படுத்திய செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

    கொரோனா காலத்தில், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை விட, சொந்த வாகனத்தில் செல்வதையே மக்கள் தற்போது விரும்புகின்றனர். பொருளாதார வசதி உள்ள சிலர் எளிதில் கார் வாங்கலாம். குறைந்த நிதி வசதி உள்ளவர்களால் அதைச் செய்ய முடியாது. எனவே புதிதாக கார் வாங்க வசதி இல்லாதவர்கள், செகண்ட் ஹேண்ட் அல்லது யூஸ்டு கார் வாங்க விரும்புகிறார்கள். கடந்த சில வருடங்களாக நாட்டில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, இதன் காரணமாக செகண்ட் ஹேண்ட் அல்லது யூஸ்டு கார்களுக்கான சந்தையும் விரிவடைந்துள்ளது.

    நீங்கள் பயன்படுத்திய காரை வாங்க நினைத்தால், அதற்கான பணத்தை எப்படி திரட்டுவது என்பது பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இப்போது வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) பயன்படுத்திய கார் மீது கடன்களை வழங்குகின்றன. நீங்களும் பயன்படுத்திய காரை வாங்க நினைத்தால், அதற்கான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விவரம் இங்கே.,

    பயன்படுத்திய கார் கடன் :

    நமது நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) செகண்ட் ஹேண்ட் அல்லது யூஸ்டு கார்களுக்கு கடன் வழங்குகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் காரின் மாடல், பயன்படுத்திய காரில் கடன் பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பயன்படுத்திய காரின் மீது (பினையமாக வைத்து) வங்கி அல்லது NBFC மூலம் கடன் வழங்கப்படும் போதெல்லாம் இரண்டு விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். முதல் கார் எவ்வளவு பழையது மற்றும் இரண்டாவது காரின் மாடல் இன்னும் தயாரிப்பில் உள்ளதா என்பவை.

    கார் வாங்கும் நேரம் மற்றும் கார் கடனின் காலம் 8-10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காரின் மாடல் மிகவும் பழையது என்றால், அதன் மீது கடன் பெற கடினமாக இருக்கும். எளிதாகக் கடனைப் பெற, புதிய மாடல் கார் மற்றும் காரின் வயது 3-4 ஆண்டுகளுக்குள் இருக்கும் காரைத் தேர்வு செய்யவும்.

    பயன்படுத்திய கார் கடன்களின் அம்சங்கள் மற்றும் நன்மைகள் :

    * புதிய கார் கடன்களுடன் ஒப்பிடும்போது பயன்படுத்திய கார் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன. எனவே, மாதாந்திர இஎம்ஐ குறைவாக இருக்கும்.
    * நீண்ட திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குகிறது
    * சில வங்கிகள் மற்றும் NBFCகள் 100% வரை நிதியுதவி அளிக்கின்றன.
    * கார் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை எளிதானது. நீங்கள் ஆன்லைனிலும் செயல்முறையை முடிக்கலாம்.
    * காப்பீட்டு செலவுகள் மற்றும் தேய்மான விகிதங்கள் புதிய கார் கடனை விட குறைவாக உள்ளது.
    * நீங்கள் செய்ய வேண்டியது கடனுக்கான சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
    * சில வங்கிகள் மற்றும் NBFCகள் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளில் சலுகைகளை வழங்குகின்றன.

    பயன்படுத்திய கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :

    புதிய கார் கடனுடன் ஒப்பிடும்போது, பயன்படுத்திய கார் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம். சில வங்கிகள் மற்றும் NBFCகள் கார் 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் கடன் வழங்காது. கடன் தொகையில் காப்பீட்டு செலவுகள் சேர்க்கப்படாது. புதிய காரை விட பயன்படுத்திய காரின் விலை குறைவாக இருப்பதால், கடன் தொகை மற்றும் காப்பீட்டு செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். கார் காப்பீட்டுக்கான புதுப்பித்தல் பிரீமியமும் குறைவாக இருக்கும்.

    வங்கிகள் பயன்படுத்திய கார்களுக்கு காரின் வயதைப் பொறுத்து ஐந்து ஆண்டுகள் வரை கடன் வழங்குகின்றன. வங்கிகள் பயன்படுத்திய கார் கடன்களை காரின் மதிப்பில் 80% வரை வழங்குகின்றன. கூடுதலாக, பயன்படுத்தப்பட்ட கார் கடன்களுக்கான வட்டி விகிதம் புதிய கார் கடன்களை விட 200-700 அடிப்படை புள்ளிகள் அதிகம். தற்போது வங்கிகள் பயன்படுத்திய கார் கடனுக்கு 10-17 சதவீத வட்டி வசூலிக்கின்றன.

    பயன்படுத்திய கார் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

    * பயன்படுத்திய கார் கடனுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை வங்கி அல்லது NBFC இணையதளத்தில் இருந்து எளிதாக ஆன்லைனில் செய்யலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க நீங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.
    * கடனைப் பெற, விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
    * கடன் விண்ணப்பப் படிவம் மற்றும் நீங்கள் இணைத்த ஆவணங்கள் வங்கியால் சரிபார்க்கப்படும்.
    * நீங்கள் வழங்கிய அனைத்து விவரங்களும் ஆவணங்களும் சரியாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பத்தின் செயல்முறை முன்னெடுத்துச் செல்லப்பட்டு உங்கள் கடன் அங்கீகரிக்கப்படும்.
    * கடன் அங்கீகரிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கடன் தொகை உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.
    * விண்ணப்பிக்கும் முன் உங்கள் கடன் பற்றிய முழுமையான தகவலைப் பெறுங்கள். சில வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு 80 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. சில நிறுவனங்கள் 100 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. நீங்கள் விரும்பும் வங்கி அல்லது NBFC அளிக்கும் கடன் பற்றிய விதிகளை அறிந்துகொள்வதுடன், கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் பற்றிய தகவல்களையும் நீங்கள் பெற வேண்டும்.
    * எதிர்காலத்தில் கடன் முன்கூட்டியே நீங்கள் தவணைகளை செலுத்த விரும்பினால், அதற்கான கட்டணங்கள் பற்றிய தகவல்களையும் பெறவும்.

    சொந்தமாக கார் வாங்க ஆசையா? இதை செய்தாலே போதும் லோன் ஈஸியாக கிடைக்கும்!

    பயன்படுத்திய கார்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள்:

    1. பாரத ஸ்டேட் வங்கி - ஐந்து வருடங்கள் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வங்கி வழங்குகிறது. வங்கி கார் கடன்களை 9.75 சதவீதம் முதல் 13.25 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் வழங்குகிறது.
    2. ஐசிஐசிஐ வங்கி - ஐந்து ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. வட்டி விகிதங்கள் 12.00 சதவீதம் முதல் 14.50 சதவீதம் வரை காணப்படுகிறது
    3. டாடா கேபிடல் - 15% வட்டி மற்றும் ஐந்தாண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் யூஸ்டு கார் லோன் வழங்குகிறது
    4. HDFC வங்கி - HDFC வங்கி 7 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலத்துக்கு,13.75 சதவீதம் முதல் 16.00 சதவீதம் வரை வட்டியில் கார் கடனை வழங்குகிறது.
    5. ஆக்சிஸ் வங்கி - ஆக்சிஸ் வங்கி ஐந்து ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தில்,. 14.40 சதவீதம் முதல் 16.40 சதவீதம் வரை வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகிறது.
    6. பஞ்சாப் நேஷனல் வங்கி- பஞ்சாப் நேஷனல் வங்கி பயன்படுத்திய கார்களுக்கு 7.90 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள்.
    7. மஹிந்திரா ஃபைனான்ஸ் - மஹிந்திரா ஃபைனான்ஸ் கடன்களுக்கு ஐந்து ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலம் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank Loan, Car

    அடுத்த செய்தி