முகப்பு /செய்தி /வணிகம் / சொந்தமாக கார் வாங்க ஆசையா? இதை செய்தாலே போதும் லோன் ஈஸியாக கிடைக்கும்!

சொந்தமாக கார் வாங்க ஆசையா? இதை செய்தாலே போதும் லோன் ஈஸியாக கிடைக்கும்!

ஆர்.பி.எல் வங்கி

ஆர்.பி.எல் வங்கி

கார் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, எந்த வங்கிகள் கார் கடன்களை வழங்குகிறது என்பதைப் பற்றிய விவரத்தை கண்டறிந்து, கிடைக்கும் அனைத்து வங்கிச் சலுகைகளையும் ஒப்பிட வேண்டும்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

பலருக்கும் தங்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப புதிய கார் அல்லது பயன்படுத்திய கார் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளது. தங்களுடைய கனவு காரை நனவாக்க, வங்கிக் கடனையே பலரும் நம்பியிருக்கிறார்கள். தற்போது, ​​​​கோவிட் 19 பெருந்தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியதிலிருந்து, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, கார் வாங்குவதில் பலரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல வங்கியும் கார் வாங்க விரும்புபவர்களுக்கு வாகனக் கடன்கள் அளித்து வருகின்றது. மற்ற கடன்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைப் போலவே, கார் கடனுக்கும் நீங்கள் குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

கார் கடன் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது மற்றும் அதற்கு என்னென்ன ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:கார் கடனுக்கான தகுதி அளவுகோல்கள் வெவ்வேறு வங்கிகளுக்கு வேறுபட்டதாக இருக்கும். ஆனால், எல்லா வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் பொதுவான சில அளவுகோல்கள் இங்கே:

· லோனுக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்

· குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.20,000 ஆக இருக்க வேண்டும்

· தற்போதைய நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்

· அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபராக இருக்க வேண்டும் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்

உங்கள் அடையாளத்தை நிரூபிக்க நீங்கள் பின்வரும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாளச் சான்றாக, உங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

முகவரி ஆதாரமாக, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, மற்றும் யுடிலிட்டி பில்கள் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், குடிநீர், எரிவாயு மற்றும் தொலைபேசி கட்டணங்கள்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

உங்களின் வயது சான்றாக, 10ம் வகுப்பு சான்றிதழ், அல்லது மத்திய / மாநில அளவில் அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

கையொப்பச் சான்றுக்கு, உங்கள் பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், தபால் அலுவலக அடையாள அட்டை, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியின் சான்றிதழுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் கூடிய வங்கி கணக்கு பாஸ்புக், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

வருமானச் சான்றுக்கு, வருமான வரி படிவம் 16, நீங்கள் சம்பளம் பெறும் பணியாளராக இருந்தால் சேலரி ஸ்லிப்ஸ், சமீபத்தில் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகள், கடந்த 6 மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

கார் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டியவை

படி-1: கார் லோன் வழங்கும் வங்கிகள், வட்டி விகிதம், கடன் தொகை

நீங்கள் கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, எந்த வங்கிகள் கார் கடன்களை வழங்குகிறது என்பதைப் பற்றிய விவரத்தை கண்டறிந்து, கிடைக்கும் அனைத்து வங்கிச் சலுகைகளையும் ஒப்பிட வேண்டும். அதிக கடன் தொகை மற்றும் மிகவும் மலிவு வட்டி விகிதத்தை வழங்கும் கடனைக் கண்டறியவும்.

படி-2: வருமான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்

நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை கடன் வழங்கும் வங்கி அறிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள் என்பதற்கு சான்றை வழங்க வேண்டும். நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், வங்கி அறிக்கை (கடந்த 6 மாதங்கள்), சேலரி ஸ்லிப்ஸ் (கடந்த 3 மாதங்கள்), வருமான வரி அறிக்கைகள் (கடந்த 2 ஆண்டுகள்), போன்றவை.

படி-3: முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் கடன் வாங்குபவரின் அடையாளம் வங்கிகளால் சரிபார்க்கப்படும். எனவே, உங்கள் அடையாள அட்டை மற்றும் முகவரியை சரிபார்க்க, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

படி-4: கடன் வரலாறு

உங்களால் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க, கடன் வழங்கும் வங்கி உங்கள் முந்தைய கிரெடிட் பதிவுகளைச் சரி பார்க்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், எளிதாகக் கடன் கிடைக்கும்.

கார் கடனைத் திருப்பிச் செலுத்துவது சாதாரணமான விஷயம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதம், அடுத்தடுத்த கடன் கிடைப்பதைக் கணிசமாகப் பாதிக்கும். ஒருவேளை கடன் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது. CIBIL - Credit Information Bureau India Limited (CIBIL) நாம் வாங்கும் கடன்கள் தொடர்பான விஷயங்களைப் பதிவு செய்வதால், கடனில் எந்தத் தவறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

படி-5: வாகனம் பற்றிய தகவல்

வாகனம் வாங்கிய ஷோரூமிலிருந்து விற்பனை ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும். கடன் பரிவர்த்தனை முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் வங்கியைச் சார்ந்தது.

படி-6: காப்பீடு மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் ஆவணங்கள்

வாங்கிய வாகனம் தொடர்பான அனைத்து விதிகள் மற்றும் நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்பதை கடன் வழங்கும் வங்கியின் முன் நிறுவ வேண்டும். இதற்காக, வாகனத்தின் மோட்டார் காப்பீடு மற்றும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகல்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் மட்டுமின்றி, கடனில் கார் வாங்க விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் எந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் மற்றும் அதன் அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஆவணங்கள் / செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவற்றை நீங்கள் விரும்பும், உங்கள் வசதிக்கு ஏற்றவாறு வழங்கும் வங்கிக் கடனைக் கண்டறியவும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFCகள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) மூலம் வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

கார் கடனுக்கு வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்தை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும், ஆனால் குறைந்த வட்டி விகிதக் கடன்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம்.

உங்கள் மாதாந்திர சம்பளம், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம், தற்போதைய EMI மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தைப் பெற உதவும். கடன் வாங்கியவர் ஏற்கனவே உள்ள வங்கியில் வைப்புத்தொகை அல்லது கணக்குகளை வைத்திருந்தால், வட்டி விகிதம் பொதுவாக குறைக்கப்படும்.

காரின் மொத்த விலையில் 20% தொகையை முன்பணமாக செலுத்தி, மீதமுள்ள தொகையை கடனாக வாங்குவது நல்லது. இதனால், இஎம்ஐ குறைவதோடு, அதனால் ஏற்படும் தனிப்பட்ட மாதாந்திரி நிதிச் சிக்கல்களையும் தவிர்க்கலாம். இதேபோல், வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், சில நிறுவனங்கள் செயலாக்க கட்டணம், காகிதப்பணி, முன்கூட்டியே செலுத்தப்படும் லோன் மற்றும் தாமதமாக செலுத்தப்படும் தவணை ஆகியவற்றுக்கு அதிக கட்டணம் விதிக்கின்றன.

எனவே, செலுத்த வேண்டிய மொத்தத் தொகை மற்றும் முதிர்வுத் தொகையைக் கருத்தில் கொண்டு வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank Loan