வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டியைக் குறைத்த கனரா வங்கி..!

வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டியைக் குறைத்த கனரா வங்கி..!
வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
  • Share this:
வீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டியை கனரா வங்கி 0.75 சதவிதம் குறைத்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை, 0.75 சதவிதம் குறைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கனரா வங்கியும், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது.

கனரா வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் மீதான வட்டியும் 0.35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை, என்று கனரா வங்கி ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் எப்போதும் முன்னணியில் உள்ளோம். கனரா வங்கி ஏற்கனவே சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்த பட்ச வைப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தையும், பணம் எடுப்பதற்கு வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading