ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒரு க்ளிக்கில் வங்கி சேவைகள் அனைத்தும் உங்கள் கையில் - கனரா வங்கி செயலியின் அம்சங்கள்.!

ஒரு க்ளிக்கில் வங்கி சேவைகள் அனைத்தும் உங்கள் கையில் - கனரா வங்கி செயலியின் அம்சங்கள்.!

canara bank

canara bank

Canara ai1 | இந்த பேங்கிங் செயலியின் மூலம் வீட்டில் இருந்தே வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்துதல், காசோலை புத்தகங்களுக்கானக் கோரிக்கையை வைப்பது போன்ற பல்வேறு வசதிகளைப் பெறுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு க்ளிக்கில் அனைத்து வங்கி சேவைகளையும் உங்களது கையில் கொண்டுவரக்கூடிய Canara ai1 என்ற புதிய மொபைல் பேங்கிங் செயலியை கனரா வங்கி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது 11 மொழிகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் எவ்வித இடையூறு இல்லாமல் வழங்கி வருகிறது. குறிப்பாக வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் விதமாக மொபைல் பேங்கிங் சேவைகளை வழங்குகின்றனர். இந்த பேங்கிங் செயலியின் மூலம் வீட்டில் இருந்தே வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்துதல், காசோலை புத்தகங்களுக்கானக் கோரிக்கையை வைப்பது போன்ற பல்வேறு வசதிகளைப் பெறுகின்றன.

இந்நிலையில் தான் கனரா வங்கியின் மொபைல் பேங்கிங் சூப்பர் செயலியான Canara ai1 ஐ அறிமுகமாகியுள்ளது. இந்த செயலியில் 250க்கும் மேற்பட்ட அம்சங்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கி தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். கனரா வங்கியின் Canara ai1 என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்திய பிறகு, கனரா வங்கியின் MD & CEO பிரபாகர் பேசுகையில், இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, மக்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும், அனைத்து இடங்களிலும் மின்னணு பரிவர்த்தணைகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்களது விரல் நுனியில் வங்கிச்சேவைகளைப் பயன்படுத்துவதற்கு வங்கி தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அறிமுகம் செய்துள்ள Canara ai1 பல்வேறு தீம்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். குறிப்பாக Canara ai1 செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த நேரத்திலும் மொபைல் ஆப்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக visual ergonomics (காட்சி பணிச்சூழலியல்) யைக் கொண்டுள்ளது.

Also Read : SBI வாடிக்கையாளரா நீங்கள்.? இந்த புதிய வசதி உங்களுக்கு தான்

இது கண் எரிச்சல் எதுவும் இல்லாமல் இரவிலும் வாடிக்கையாளர்கள் திரையை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. நம்முடைய தேவைக்கு ஏற்ப லைட்டிங்கை சரிசெய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. குறிப்பாக இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளால் பேட்டரி ஆற்றலைச் சேமிக்க முடியும்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக 11 மொழிகளில் Canara ai1 செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் செய்தல், விமான டிக்கெட் முன்பதிவு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், கடன் திருப்பிச்செலுத்துதல், மியூச்சுவல் பண்ட். இன்சுரன்ஸ் போன்றவற்றிற்கு இந்த செயலியின் மூலம் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி கொள்ளலாம்.

Also Read : ரூ 22 லட்சத்தை சொந்தமாக்கலாம்..எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

இதோடு மட்டுமின்றி PPF கணக்கு, சுகன்யா சம்ருத்தி கணக்குகள், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு மற்றும் கிசான் விகாஸ் பத்ரா, PMJJBY, PMSBY & APY போன்ற பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களையும் நாமினி நிர்வாகத்துடன் வழங்குகிறது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை வங்கிக்கணக்கு இல்லாத பயனர்கள் UPI மற்றும் Canara ai1-The Banking Super App இன் ஷாப்பிங் வசதியையும் பயன்படுத்தலாம். வீடியோ KYC மூலம் உண்மையான நேரத்தில் டிஜிட்டல் முறையில் தங்கள் கணக்கைத் திறக்கும் வசதிகளும் அடங்கியுள்ளது. மேலும் கனரா ஏஐ1 - பேங்கிங் சூப்பர் ஆப் ஆனது உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள சில தட்டல்களில் அனைத்து வேலைகளையும் செய்துவிடும் என்று வங்கி மேலும் கூறியுள்ளது.

Also Read : பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வட்டி! ஆச்சரியம் தரும் சிறு வங்கிகள்

இன்றைய நிலவரப்படி, 3.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் Canara ai1 பேங்கிங் சூப்பர் ஆப்ஸைப் பயன்படுத்துவதாகம் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பிளாக்/அன்பிளாக் இன்டர்நெட் பேங்கிங்/ யுபிஐ/ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்றவற்றின் மூலம் பண பரிவர்த்தனை வரம்புகளை அமைக்கலாம் எனவும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Canara Bank, Mobile banking