Home /News /business /

கனரா வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் சூப்பரான திட்டம்..வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

கனரா வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் சூப்பரான திட்டம்..வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 3ஆவது பெரிய நிறுவனமாக திகழும் கனரா வங்கியானது, சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகிய இரு சாராருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெபோ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்திய நிலையில், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஃபேங்க் ஆஃப் பரோடா வங்கியானது சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது கனரா வங்கியும் அதேபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    ரூ.2 கோடிக்கும் குறைவான அளவில் டெபாசிட் செய்ய விரும்புபவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.

    savings account : சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி இந்த வங்கிகளில் கிடைக்கும்!

    செப்.30 வரையில் இந்தத் திட்டத்தில் சேரலாம்

    கனரா வங்கியின் சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சேருவதற்காக வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீட்டுக் காலம் 333 நாட்கள் ஆகும். பொதுமக்களுக்கு 5.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

    ஜூன் 23ஆம் தேதி முதல் அமலில் உள்ள வட்டி விகிதம்

    கனரா வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கீழே காணலாம்.

    7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை : பொதுமக்கள் - 2.90 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 2.90 சதவீதம்

    46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை : பொதுமக்கள் - 4 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4 சதவீதம்

    91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை : பொதுமக்கள் - 4.05 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 4.05 சதவீதம்

    180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை : பொதுமக்கள் - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5 சதவீதம்

    270 நாட்கள் முதல் ஓராண்டுக்கு குறைவாக : பொதுமக்கள் - 4.55 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.05 சதவீதம்

    333 நாட்கள் சிறப்பு திட்டம் : பொதுமக்கள் - 5.10 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.6 சதவீதம்

    ஓராண்டு மட்டும் : பொதுமக்கள் - 5.30 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.80 சதவீதம்

    ஓராண்டுக்கும் மேல் 2 ஆண்டுகளுக்குள் : பொதுமக்கள் - 5.40 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.90 சதவீதம்

    2 ஆண்டுகளுக்கும் மேல் 3 ஆண்டுகளுக்குள் : பொதுமக்கள் - 5.45 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 5.95 சதவீதம்

    பேங்க் போறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை தெரிஞ்சிட்டு போங்க… காசோலை முறையில் புதிய மாற்றம்!

    3 ஆண்டுகளுக்கும் மேல் 5 ஆண்டுகளுக்குள் : பொதுமக்கள் - 5.70 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.20 சதவீதம்

    5 ஆண்டுகளுக்கும் மேல் 10 ஆண்டுகள் வரை : பொதுமக்கள் - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்கள் - 6.25 சதவீதம்

    ரிசர்வ் வங்கி தனது ரெபோ ரேட் விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் தங்களது பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Canara Bank, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி