ஹோம் /நியூஸ் /வணிகம் /

canara bank : வட்டியில் மாற்றம்.. கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுப் பற்றி தெரியுமா?

canara bank : வட்டியில் மாற்றம்.. கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுப் பற்றி தெரியுமா?

கனரா வங்கி

கனரா வங்கி

canara bank interest: யுனிக் ‘1111 நாட்கள்’திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் அதிகபட்சம் 5.85 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி மாற்றம் குறித்து அறிவித்துள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

  நிலையான வைப்பு தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டம் இன்று பலரின் விருப்பமாக உள்ளது. பணத்தை பெருக்குவதிலும் சரி பாதுகாப்பிலும் சரி இரண்டிலுமே வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் கைக்கொடுக்கிறது. நாம் சேமிக்கும் பணம் நல்ல லாபத்துடன் ஒரு 5 அல்லது 6 வருடத்திற்கு பின்பு நம் கையில் வந்தாலே போதும், அதுவும் பாதுகாப்பாக இருந்தால் போதும், அரசு உத்தரவாதம் அளித்தால் போதும்.இப்படி தான் பலரின் எண்ணமாக உள்ளது. பிக்சட் டெபாசிட் திட்டம் அதிக லாபத்தை தரக்கூடியதாக உள்ளது. வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், நிதி நிறுவனங்களிலும் பல்வேறு வகையான பிக்சட் டெபொசிட் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களின் தேவையை பொறுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

  அந்த வகையில் புது வருடம் பிறந்த உடனே பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை பல வங்கிகள் உயர்த்தி வருகின்றன. எஸ்பிஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி ஆகியவை சமீபத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தன. இந்நிலையில் தற்போது கனரா வங்கியும்  பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியில் சில மாற்றங்களை செய்துள்ளது. 2 கோடிக்கு கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.  இனி கனரா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்ச வட்டி 2.90 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி 5.35 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதே போல் கனரா வங்கியின் யுனிக் ‘1111 நாட்கள்’திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் அதிகபட்சம் 5.85 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

  இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் அப்டேட் ... அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

  இப்போது கனரா வங்கியில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் விவரங்களையும் அதற்கு வழங்கப்படும் வழங்கப்படும் வட்டி குறித்தும் பார்க்கலாம். இந்த வட்டி மாற்றங்கள் ஜனவரி 17 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.

  இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தெரியாமல் கூட இந்த தப்பை செய்து விடாதீர்கள்!

  7 நாள் முதல் 45 நாள் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 2.90%, 46 நாள் முதல் 90 days நாள் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 3.90%, 91 நாள் முதல் 179 நாள் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 3.95%, 180 நாள் முதல் 1 வருடம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 4.40%, 1 வருடம் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 5.10%, 1 வருடம் முதல் 2 வருடம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 5.10%, 2 வருடம் முதல் 3 வருடம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 5.10%, 3 வருடம் முதல் 5 வருடம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 5.25%, 5 வருடம் முதல் 10 வருடம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி - 5.25%

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank accounts, Canara Bank