பிக்சட் டெபாசிட் திட்டம் ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டங்களில் முதலிடத்தில் இருக்கிறது. காரணம், இந்த திட்டங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு மொத்த பணமும் முதிர்வு தொகையில் கிடைத்து விடுகிறது. மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டிக்கு இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டியை கனரா வங்கி அதிகரித்துள்ளது. அதுக்குறித்த விரிவான தகவல்கள் இதோ..
சேமிப்பு திட்டங்களில்
பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட கால வரம்பிற்கு இத்திட்டத்தில் முதலீடு செய்கையில், முதர்ச்சி காலத்தில் அனைத்து திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்களை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கி பல்வேறு மாற்றங்களை அறிவிக்கும் போது பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியையும் உயர்த்தி இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு பிறந்து 2 மாதமே முடிந்துள்ள நிலையில் மறுபடியும் வட்டியை உயர்த்தி அறிவித்துள்ளது. இது, வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் சந்தோஷத்தை தரும்.
இதையும் படிங்க.. ஏப்ரல் 4 முதல் ரூல்ஸ் மாறுது.. பஞ்சாப் நேஷனல் வங்கி சொன்ன அதிர்ச்சி தகவல்!
கனரா வங்கி, பி
க்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கனரா வங்கியில் 1 ஆண்டிற்கான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு இனி 5.1 சதவீத வட்டி வழங்கப்படும். அதே போல், 1 முதல் 2 ஆண்டு திட்டத்தில் வட்டி விகிதமானது 5ல் இருந்து 5.15 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க.. Savings Account : போஸ்ட் ஆபீஸ் பேங்கில் தொடங்க திட்டமா..! இந்த செய்தி உங்களுக்கு தான்
* 2 முதல் 3 ஆண்டு வரையிலான திட்டத்தின் வட்டி 5.20%
* 3 முதல் 5 ஆண்டு வரையிலான திட்டத்தின் வட்டி 5.45%
* 5 முதல் 10 ஆண்டு வரையிலான திட்டத்தின் வட்டி 5.5%
அதே போல் கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.50 வட்டியை உயர்த்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.