ஹோம் /நியூஸ் /வணிகம் /

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சம் வரை ஈஸியா கடன் வாங்கலாம்!

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சம் வரை ஈஸியா கடன் வாங்கலாம்!

 லோன்

லோன்

செப்டம்பர் 30, 2021 வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் யூஸ் பண்ணிக்கோங்க.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கனரா வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான். சிரமம் இல்லாமல் ரூ. லட்சம் வரை நீங்கள் ஈஸியா கடன் வாங்கலாம் தெரியுமா?

  இந்த கொரோனா காலக்கட்டத்தில் இந்த தகவல் கண்டிப்பாக உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும். கனரா வங்கி வாடிக்கையாளர்கள் நன்கு கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்காகவே கனரா வங்கி சுகாதாரக் கடன், தொழில் கடன் மற்றும் பர்சனல் லோன் என சிறப்பான 3 லோன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் சில சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சுரக் ஷா பர்சனல் லோன் திட்டத்தின் கீழ் ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை நீங்கள் கடன் பெறலாம். செப்டம்பர் 30, 2021 வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் யூஸ் பண்ணிக்கோங்க.

  கனரா சுரக் ஷா திட்டம் எனப்படும் சுகாதாரக்கடனில் மருத்துவமனைகள் , மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரா சிகித்ஸா எனப்படும் தொழில் கடனில் ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும். இதற்கு வட்டிச் சலுகையும் உண்டு. இந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படாது. எனவே வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு வட்டி குறையும், கவலை வேண்டாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதே போல் கனரா ஜீவன் ரேகா திட்டத்தில் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு அவசரக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வங்கிகளில் இதுப்போன்ற சலுகைகள் நிறைந்த லோன்களை பெறும் போது வாடிக்கையாளர்கள் அதிக வட்டி மற்றும் செயலாக்க கட்டணத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Canara Bank