இந்த நம்பருக்கு ஃபோன் செய்தால் போதும்... வாடிக்கையாளர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் கனரா வங்கி!

கனரா வங்கி

உங்களிடம் நெட் சேவை இல்லையென்றால் பதற்றமே வேண்டாம் உடனே கார்டைப் பிளாக் செய்ய மற்றொரு வழியும் உள்ளது

 • Share this:
  கனரா வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சில முக்கியமான சேவைகள் குறித்து தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

  வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை என்பது முக்கியமான ஒன்றாகும். மூத்த குடிமக்கள் தொடங்கி இளம் வயதினர் என அனைவருக்கும் எளிமையான முறையில் தான் வங்கி சேவைகள் செயல்படுகின்றன. முன்பெல்லாம் எல்லாவற்றிற்கும் வங்கி செல்ல வேண்டிய காலம் மாறி இப்போது அனைத்தும் டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. பணம் எடுப்பதற்கு கூட பேங்குக்கு போக வேண்டாம். வீட்டுக்கு வந்து டோர் டெலிவரி செய்யும் வசதி கூட சில வங்கிகளில் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக இந்த மகத்தான சேவை செயல்பாட்டில் உள்ளது. இதுபோல் என்னற்ற சிறப்பான வாடிக்கையாளர்கள் சேவைகள் வங்கிகளில் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்று குறித்து தான் பார்க்க போகிறோம்.

  டெபிட் கார்டு அப்ளை செய்வது எப்படி எளிமையோ? அதைவிட எளிது அந்த கார்டு தொலைந்து விட்டால் அதை பிளாக் செய்வதும் அல்லது புதிய கார்டுக்கு அப்ளை செய்வதும். டெபிட் கார்டு வாங்க கூட நேரில் செல்ல தெவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதும். 1 வாரத்திற்குள் வீடு தேடி டெபிட் கார்டு போஸ்ட் வரும். அதே போல் டெபிட் கார்டு தொலைந்தாலும் ஈஸியாக பிளாக் செய்து புது கார்டு வாங்கலாம்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்றால் அந்த நேரத்தில் உங்களிடம் நெட் சேவை இல்லையென்றால் பதற்றமே வேண்டாம் உடனே கார்டைப் பிளாக் செய்ய மற்றொரு வழியும் உள்ளது. தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கனரா வங்கியில் ஃபோன் சேவை மூலமாக தொலைந்த டெபிட் கார்டை பிளாக செய்யும் வசதி உள்ளது.

  கார்டு தொலைந்து விட்ட பதற்றத்தில் பலரும் செய்வதறியாமல் திகைப்பார்கள். ஆன்லைனில் பிளாக் செய்யலாமா? அல்லது வங்கிக்கு செல்லலாமா? இதுப்போன்ற குழப்பங்கள் வரும். இனி அதுக் குறித்து கவலை வேண்டாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கனரா வங்கியின் 1800 425 0018 என்ற கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்தாலே போதும் உங்கள் பிரச்சனை தீர்ந்த்துவிடும். அதாவது, இந்த நம்பருக்கு கால் செய்து உங்கள் மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் கார்டு தொலைந்து விட்டதை தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்பு உங்களின் பெயர், அக்கவுண்ட் நம்பர் போன்ற அக்கவுண்டை உறுதிப்படுத்துவதற்கான சில கேள்விகள் கேட்கப்படும் . அதற்கு நீங்கள் பதில் அளித்தால் போது சில வினாடிகளில் உங்கள் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும்.

  இதே ஆஃப் லைன் சேவையில் மற்றொரு வசதியும் உள்ளது. மெசேஜில் CAN HOTLISTDC XXXXXXXXXXXXXXXX இந்த இடத்தில் உங்கள் டெபிட் கார்டில் 16 இலக்க நம்பரை டைப் செய்து 5607060 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போது உங்கள் டெபிட் கார்டு பிளாக் செய்யப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: