• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கனரா பேங்க் ஏடிஎம் கார்டு தொலைந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

கனரா பேங்க் ஏடிஎம் கார்டு தொலைந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

கனரா பேங்க்

கனரா பேங்க்

டெபிட் கார்டு தொலைந்து போனால் அதை நினைத்து பதற்றம் அடைய வேண்டாம்.

  • Share this:
    கனரா வங்கி டெபிட் கார்டை வைத்திருப்பவர்கள், கார்டு தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ செய்ய வேண்டிய என்ன என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்

    இன்றைய அவசர உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகமாக புழகத்தில் உள்ளது. எங்கு சென்றாலும் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. கார்டு இருந்தால் போதும் அல்லது ஃபோன் இருந்தாலே போதும் ஈஸியாக பணத்தை செலுத்திவிடலாம். மளிகை கடையில் கூட ஏடிஎம் மிஷின் வந்துவிட்டது. அதனால் டெபிட் கார்டு கொண்டு போனால் தேவையானவற்றை அள்ளிட்டு வந்துவிடலாம். இப்படி டெபிட் கார்டுகளின் தேவை அதிகள் இருப்பதால் அவை தொலைந்து போகவும் வாய்ப்பு உண்டு. அதனால் அதை கவனமாக கையாள்வது மிக மிக முக்கியம். அதே சமயம் உங்களை அறியாமலோ தவறுதலாகவோ டெபிட் கார்டு தொலைந்து போனால் அதை நினைத்து பதற்றம் அடைய வேண்டாம்.

    கார்டை ஈஸியாக பிளாக் செய்யலாம். புதிய கார்டை ஒருசில தினங்களில் மீண்டும் வங்கியில் இருந்து பெற்று கொள்ளலாம். அந்த வகையில் இன்று கனரா வங்கி டெபிட் கார்டை வைத்திருப்பவர்கள், கார்டு தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ செய்ய வேண்டிய என்ன என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். முதலில் கார்டு தொலைந்த உடனே, கனரா வங்கியின் 1800 425 0018 என்ற கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்து கார்டை பிளாக் செய்யலாம்.

    போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? இந்த ரூல்ஸ் மாறிடிச்சு உங்களுக்கு தெரியுமா?

    இந்த நம்பருக்கு ஃபோன் செய்து ஐவிஆர் மொழியை தேர்வு செய்து, அதன் பிறகு ஏடிஎம் கார்டு பிளாக் என்ற ஆப்சனுக்கு தேர்வு செய்தால், உங்களிடம் வங்கி சேவை அதிகாரி பேசுவார். அவரிடம் உங்கள் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், பிறந்த தேதி விவரங்களை கூறி கார்டை உடனடியாக பிளாக் செய்யலாம். இல்லையென்றால் உடனே வங்கி கிளைக்கு சென்று
    16 இலக்க ஏடிஎம் நம்பரை கூறி, கார்டு தொலைந்து போன புகாரை பதிவு செய்து கார்டை பிளாக் செய்யலாம். ஆன்லைனிலும் கார்டை பிளாக் செய்ய முடியும். கனரா வங்கியின் நெட் பேங்கிங் தளத்துக்குள் சென்று லாகின் ஐடி & பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.மெனு பாரில் உள்ள request என்ற ஆப்சனை கிளிக் செய்து, பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டினை தேர்தெடுக்கவும். சரியான அட்டையை தேர்தெடுத்த பின்னர் அதனை confirm என்ற ஆப்சனை கிளிக் செய்தால்.டெபிட் கார்டு பிளாக் செய்யப்படும்.



    அடுத்தது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து CAN என டைப் செய்து, ஒரு Space விட்டு, HOTLISTDC ஒரு Space விட்டு 16 இலக்க ஏடிஎம் கார்டு நம்பரை டைப் செய்து 5607060 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.உங்களது காடு உடனே பிளாக் செய்யப்படும். இதுப்போன்ற விவரங்களை இதுவரை தெரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த பதிவு உதவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: