• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • விதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்

விதிகளை மீறும் இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் அழியும் - மோடிக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம்

ஆன்லைன்

ஆன்லைன்

விதிகளை மீறும் இணைய விற்பனை நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அது சிறு, குறு தொழில்களை அழித்துவிடும் என்று அகில இந்திய வர்த்தர்களின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய விற்பனை நிறுவனங்கள் இணைய சில்லறை வர்த்தகத்தில் முக்கிய நிறுவனங்களாக இருந்துவருகின்றன. இந்த நிறுவனங்களின் ஆண்டு வருமானம் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து சில ஆண்டுகளாக குற்றம்சாட்டிவருகிறது. இந்தநிலையில், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில், ‘பெரிய இணைய விற்பனை நிறுவனங்கள் ஏராளமான பொருளாதார வசதியைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியாவில் சில்லறை வர்த்தக தொழிலை மேற்கொள்வதற்கு நேரடி அன்னிய முதலீடு விதிகளை மீறியும், மோசடி செய்தும் தங்களுடைய தொழிலை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கின்றன. இணைய விற்பனை நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சிறுகுறு தொழில்கள் செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

    பெரும்பாலான அரசு அதிகாரிகள் மத்திய அரசின் விதிகளை காப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அந்நிய நேரடி முதலீடு விதிகளுக்கு மாறாக அதிக அளவிலான தள்ளுபடி, அவர்களுக்கென்று பிரத்யேக விற்பனைப் பொருள்கள் ஆகிய வழிகளைப் பின்பற்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளனர்.




    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: