Home /News /business /

அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம்

அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம்

Amazon

Amazon

அமேசான் நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது

அமேசான் இ-காமர்ஸ் நிறுவனத்தின் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் முக்கியமான காலகட்டத்தில், கஞ்சா விற்பனை கும்பலை பிடிப்பதில் முக்கிய பங்காற்றிய மாவட்ட எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

குண்டூசி முதல் டூவீலர் வரை விற்பனை செய்யப்படும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல், 2 வாரத்திற்கு முன்பு பிடிபட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்திருந்த நிறுவனம் தான் இதற்கு காரணம் என்று போலீசார் கண்டறிந்தனர்.  விசாரணையின் போது அமேசான் தரப்பில் ஒத்துழைப்பு ஏதும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இந்திய இயக்குனர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக இந்த குற்றச் செயல் நடந்து வருவதாக சந்தேகித்துள்ள போலீசார், ரூ.1 கோடி மதிப்புள்ள  600 முதல் 700 கிலோ கஞ்சா நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

Also read:  அமேசான் வர்த்தக நிறுவன உதவியால் கஞ்சா விற்பனை நடந்த வழக்கில் 5 பேர் கைது

இதனிடையே இந்த வழக்கின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்திய, பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மனோஜ் குமார் சிங், திடீரென பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன் பிந்த் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்ட அவர் தற்போது, தலைநகர் போபாலில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சைலேந்திர செளகான் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அமேசான் மூலம் கஞ்சா விற்பனை - சப்ளை செய்யப்பட்ட வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கும் நிலையில், மாவட்ட எஸ்.பி மாற்றப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எஸ்.பி மாற்றத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வரக்கூடிய நெருக்கடிக்கு மத்திய பிரதேச மாநில அரசு பணிந்துவிட்டதாகவும், இதனை தாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை, விரைவில் நாடுதழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் CAIT சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAIT demands ban on Amazon's e-commerce operations in India | Deccan Herald
CAIT போராட்டத்தின் போது...


Also read:  டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்

அமேசான் தளத்தின் மூலம் சட்டவிரோதமாக போதை பொருட்கள், விஷம் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ரசாயணங்கள் சப்ளை செய்யப்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்துவரும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி அனைந்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Amazon, Madhya pradesh, Marijuana

அடுத்த செய்தி