• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • விதிமுறைகளை மீறி விற்பனை.. அமேசான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர்கள் கூட்டமைப்பு புகார்..

விதிமுறைகளை மீறி விற்பனை.. அமேசான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர்கள் கூட்டமைப்பு புகார்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலையை வைப்பதன் மூலம் சிறு வணிகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது

  • Share this:
    அமேசானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்க இயக்குநரகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அமேசான் போன்ற பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலையை வைப்பதன் மூலம் சிறு வணிகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கடந்த 2012-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிலிருந்து நாட்டின் சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளது என்பதை நிரூபிக்க தேவையான அனைத்து விவரங்களுடனும் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.

    அந்நிய நேரடி முதலீடு கொள்கை மற்றும் ஃபெமா (FEMA) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் பாதுகாக்கப்பட விரும்பும் கோடிக்கணக்கான சிறு வணிகர்களுக்கு இந்நிறுவனம் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியான மீறல்கள் இருந்த போதிலும் அமேசானுக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வணிகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் 7 கோடி வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைக்கப்பட்ட நபர்கள் ஏமாற்றமடைந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளது.

    உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்தமாக பொருட்களை வாங்கும் அமேசான் சில குறிப்பிட்ட விற்பனை நிறுவனங்களுக்கு மட்டும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அந்த விற்பனை நிறுவனங்களின் சலுகைகளைப் பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையில் அதிகப்படியான தள்ளுபடியைத் தடுக்க இந்தியா கடந்த ஆண்டு விதிமுறைகளை கடுமையாக்கியது. ஆனால் அமேசான் சலுகைக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு சிக்கலான வணிக கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதாக சிறு விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    Corona Vaccine | இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை விற்பதற்கு அனுமதி கேட்டது சீரம் இன்ஸ்டிட்யூட்..

    இது குறித்து வணிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது, "இந்திய சில்லறை விற்பனையாளர்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் வெளிநாட்டு இ -காமர்ஸ் நிறுவனங்களால் ஏற்படும் சேதத்தின் அளவை மறந்துவிடக் கூடாது என்றும், அதற்கு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது எனவும் வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இ -காமர்ஸ் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்கத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இது குறித்து பேசிய வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால்,"அமேசான் விற்பனையாளர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (அமேசான் இந்தியா) மற்றும் பிற சொந்தமான துணை நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் அமேசான் எவ்வாறு சந்தை அடிப்படையிலான மாதிரி உடையில் பல பிராண்ட் சில்லறை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது" என்ற கேள்விகள் தங்களுக்கு எழுந்துள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அமேசான் நிறுவனம் அந்நிய நேரடி முதலீடு கொள்கை, பத்திரிகை குறிப்புகள் மற்றும் ஃபெமா சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முழுமையாக மீறியுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

    வாந்தி, கை, கால் வலிப்பு.. ஆந்திராவில் தாக்கும் மர்மநோய்.. ஒருவர் உயிரிழப்பு.. பாதிக்கப்பட்ட 300 பேருக்கு தீவிர சிகிச்சை..

    அமலாக்கத்துறை உடனான எங்கள் தகவல்தொடர்புகளில், அமேசான் ஒரு MBRT நிறுவனமான மோர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் எவ்வாறு முதலீடு செய்துள்ளது என்பதையும், "சமரா ஏஐஎஃப்" என்ற ஒரு முன்னணி நிறுவனத்தை எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளோம். அது மட்டுமல்லாது, முதலீட்டாளர்களின் பணத்தை திரட்டும் நோக்கத்திற்காக செபியால் அனுமதிக்கப்பட்ட AIF அமைப்பு MBRT நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நிதி முதலீடு மற்றும் வருமானம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...மால்குடி டேஸ் நினைவு வருகின்றது.. இணையவாசிகளை நெகிழவைத்த டைம் ட்ராவல் அனிமேஷன்.. வைரலாகும் வீடியோ..

    இது அமேசானால் தனியாக செய்ய முடியாது. எனவே அமேசானில் இருந்து அனைத்து ஆவணங்களையும் ஒப்பந்தங்களை பற்றியும் அமலாக்கத்துறை உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். அமலாக்கத்துறை (ED), இந்திய போட்டி ஆணையம் (CCI) மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) ஆகியவை இதை ஆராய்ந்து, அமேசானின் அனைத்து மீறல்களுக்கும் அதிகபட்ச அபராதம் விதித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதாவது சட்டவிரோத முதலீடுகளின் மதிப்பான ரூ.48,500 கோடியில் 3 மடங்கு அதாவது 1,44,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: