உணவு பதப்படுத்தும் துறைக்காக இந்தியா - ஜப்பான் இணைந்து செயல்பட மத்திய அமைச்சகம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் உணவு பதப்படுத்தும் துறைகளில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தல் துறையில் ஏற்பட்டுட உள்ள இந்த ஒத்துழைப்பால் இரண்டு நாடுகளும் பயன்பெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் இரண்டு நாடுகளிலும் உணவு பதப்படுத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்வதோடு, சந்தை அணுகலை மேம்படுத்தும்.
புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டில் உணவு பதப்படுத்தும் துறை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
உணவு பதப்படுத்தும் துறையில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுதவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
மேலும் படிக்க: சேலத்தை கலக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு அதிநவீன இயந்திரம்
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.