Home /News /business /

LIC IPO: எல்.ஐ.சி. பொதுப் பங்கு விற்பனையில் 20 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

LIC IPO: எல்.ஐ.சி. பொதுப் பங்கு விற்பனையில் 20 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

LIC IPO Share: தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 20 சதவீதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப் பங்கு விற்பனை (IPO) விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது பங்குகளை வாங்க 20 சதவீதம் வரை அந்நிய முதலீட்டுக்கு (FDI) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி (Life insurance corporation of india) விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்குகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்து ரூ.78 ஆயிரம் கோடி நிதி திட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பொது பங்கு வெளியீட்டிற்கான வரைவு அறிக்கையை (DRHP) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது.

    இதையும் படிக்க: பிக் பஜார் உள்ளிட்ட ஃப்யூச்சர் ரீடெய்ல் கடைகளை கையகப்படுத்தியது ரிலையன்ஸ்.. வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு


    இந்நிலையில், எல்.ஐ.சி பொது பங்குகள் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது இதற்காக அந்நிய நேரடி முதலீடு கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 20 சதவீதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cabinet, FDI, LIC

    அடுத்த செய்தி