• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பிராந்திய மொழிகளில் இ-லர்னிங்: பைஜூஸின் புதிய திட்டம்!

பிராந்திய மொழிகளில் இ-லர்னிங்: பைஜூஸின் புதிய திட்டம்!

பைஜூஸ்

பைஜூஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    இ-லர்னிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் விரைவில் பிராந்திய மொழிகளில் பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

    இந்தியாவில் உள்ள அனைத்து இ-லர்னிங் சேவைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்களை வழங்கி வருகின்றன. அதிலிருந்து சற்று விலகி பைஜூஸ் நிறுவனம், பிராந்திய மொழியில் பாடங்களை வழங்க உள்ளதாக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பைஜூ ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

    பைஜூஸ் இ-லர்னிங் சேவைக்காக 30 கோடி பயனர்கள் பதிவு செய்துள்ளனர், அதில் 2 கோடி நபர்கள் கட்டண பயனர்களாகவும் உள்ளனர். முதற்கட்டமாக பைஜூஸ் மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இ-லர்னிங் பாடங்களை வழங்க உள்ளது.

    Byjus | பைஜூஸ்’ ஆப்
    பைஜூஸ் ஆப்


    இந்திய இ-லர்னிங் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பைஜூஸ்க்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 100 சதவீத வளர்ச்சி வருவதாகும் ரவீந்திரன் கூறுகிறார்.

    பைஹூஸில் நாடு முழுவதும் 3,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சர்வதேச அளவில் 784 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டையும் பெற்றுள்ளது. தற்போது பைஜூஸின் மொத்த மதிப்பு 3.6 பில்லியன் டாலர்கள் என்றும் தரவுகள் கூறுகின்றன.

    பைஜுஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: