Home /News /business /

முதல் முறையாக இன்சூரன்ஸ் வாங்குகிறீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய 4 முக்கியமான மேட்டர்கள்!

முதல் முறையாக இன்சூரன்ஸ் வாங்குகிறீர்களா? கவனத்தில் கொள்ள வேண்டிய 4 முக்கியமான மேட்டர்கள்!

Life Insurance : பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் பாலிசியின் நாமினிகளுக்கு ஒரு உறுதியான தொகையை செலுத்தும்.

    காப்பீடு (இன்சூரன்ஸ்) என்பது வரியை சேமிக்க உதவும் ஒரு கருவி மட்டுமல்ல. சரியாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், ஒரு இன்சூரன்ஸ் ஆனது காப்பீடு எதிர்பாராத நிகழ்வின் காரணமாக நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் சந்திக்கும் இழப்பிற்கு போதுமான நிதி பாதுகாப்பை வழங்கும். எனவே தான் ஒரு காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதன் முக்கியத்துவம் மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

    1சில்வர்புல்லட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ஆன மிலன் கணத்ரா, இன்சூரன்ஸின் வகைகள் மற்றும் முதல் முறையாக காப்பீடு வாங்கும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இன்சூரன்ஸ் பொதுவாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ்.

    லைஃப் இன்சூரன்ஸ் : இதன் பெயர் குறிப்பிடுவது போல, லைஃப் இன்சூரன்ஸ், அதாவது ஆயுள் காப்பீடு என்பது பாலிசிதாரரின் வாழ்நாளை காப்பதாகும். இந்த பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் பாலிசியின் நாமினிகளுக்கு ஒரு உறுதியான தொகையை செலுத்தும். இந்தியாவில் மிகவும் பொதுவான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள்: முழு ஆயுள் காப்பீடு, கால ஆயுள் காப்பீடு, எண்டோவ்மென்ட் திட்டங்கள், யூனிட்-லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்ஸ் (ULIP), சைல்ட் பிளான்ஸ் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள்.

    ஜெனரல் இன்சூரன்ஸ்:

    சுருக்கமாகச் சொன்னால், உடல்நலம், வீடு, மோட்டார், தீ மற்றும் பயணம் உட்பட அனைத்து லைஃப் இன்சூரன்ஸ் அல்லாத சொத்துக்களையும் இந்தப் பிரிவு உள்ளடக்கியது.

    முதல் முறையாக இன்சூரன்ஸ் வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

    உங்கள் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள்:

    உங்களுக்கு அகால மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு காப்பீடு கிடைக்க வேண்டுமா? அல்லது உங்கள் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தகுந்த இழப்பீடு கிடைக்க வேண்டுமா? இப்படி உங்களுக்கு ஏன் காப்பீடு தேவை என்பதை மதிப்பிட தொடங்குங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கான இன்சூரன்ஸை தேடுகிறீர்களா? அல்லது லைஃப்டைம் இன்சூரன்ஸை தேடுகிறீர்களா? முதலில் உங்களின் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    Also Read : நிஜம் தான் நம்புங்க.. பிக்சட் டெபாசிட்டை விட இந்த திட்டத்தில் வட்டி அதிகம்!

    உங்கள் பட்ஜெட்டை சீரமைக்க வேண்டும்: இன்று, ஒருவரால் மிகவும் குறைந்த பிரீமியத்தில் மிகவும் மலிவு விலையிலான இன்சூரன்ஸை வாங்க முடியும். ஒருவர் தனது தேவைகளுக்கு ஏற்ப கவரேஜையும் தேர்வு செய்யலாம். உதாரணமாக, நீங்கள் எப்போதும் தனியாகப் பயணம் செய்பவர் என்றால், மோட்டார் வாகனக் காப்பீட்டை வாங்கும் போது உடன் வரும் பயணிகளுக்கான கவரேஜைத் தவிர்க்கலாம்.

    ஹெல்த் இன்சூரன்ஸ் மீது முக்கியத்துவம்:

    இன்சூரன்ஸ் என்றாலே, முதல் முன்னுரிமை ஹெல்த் இன்சூரன்ஸிற்கு தான் கொடுக்க வேண்டும். இது அவசரநிலையின் போது தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான திறனை உறுதி செய்கிறது. இது உங்களின் எதிர்கால வருமானம் மற்றும் உங்கள் சேமிப்பையும் பாதுகாக்கும்.

    ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திடம் இருந்து இன்சூரன்ஸை வாங்கவும்:

    ஒரு இன்சூரன்ஸை வாங்கும் போது, அந்த ​​நிறுவனத்தின் க்ளெய்ம்ஸ் செட்டில்மென்ட் ரேஷியோவை (claims settlement ratio) சரிபார்க்க வேண்டும். ஒரு காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வருடத்தில், அந்த வருடத்தில் உள்ள மொத்த க்ளெய்ம்களின் எண்ணிக்கையையும், அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள க்ளெய்ம்களையும் சேர்த்து ஒரு வருடத்தில் செட்டில் செய்துள்ள லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கைகளின் சதவீதமே - க்ளெய்ம்ஸ் செட்டில்மென்ட் ரேஷியோ ஆகும்.

    ஒரு இன்சூரன்ஸை வாங்கும் போது, கவரேஜ் மற்றும் பிரீமியங்களுக்கான வெவ்வேறு விருப்பங்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதும், எப்போதும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்திடம் இன்சூரன்ஸை வாங்குவதும் மிகவும் முக்கியம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Insurance, Life Insurance

    அடுத்த செய்தி