ஹோம் /நியூஸ் /வணிகம் /

வைரம் வாங்க ஆசையா? வைரத்தை பற்றி தெரியாத பல தகவல்கள் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

வைரம் வாங்க ஆசையா? வைரத்தை பற்றி தெரியாத பல தகவல்கள் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

இன்று தங்கத்தின் விலை என்ன, 22 கேரட் தங்கத்தின் விலை என்ன, 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்று தேடினால் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை நிர்ணயித்து விட முடியும். ஆனால் வைரத்தின் விலையை தெரிந்துகொள்ள முடியாது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தங்கத்தை போலவே வைர நகைகள் வாங்கும் ஆர்வமும் அதிகம் இருந்து வந்துள்ளது. அதிக விலை காரணமாக தங்கம் வாங்கும் அளவுக்கு வைரம் வாங்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் வைர நகைகளை வாங்குவதில் தோஷம் இருக்கிறதா, இந்த ராசிக்காரர்கள் அணியக்கூடாது என்றெல்லாம் ஒரு சிலவற்றைப் பார்க்கிறார்கள்.

  அதையெல்லாம் கடந்து, வைர நகைகள் விற்பனை அதிகமாகி வருகின்றன. 916, 22 கேரட், பி ஐ எஸ் ஹால்மார்க் என்று தங்க நகை வாங்கும்போது அதற்கு பல மதிப்பீடுகள் உள்ளன. அதுபோல வைரத்திற்கு என்ன மதிப்பீடு இருக்கிறது? உண்மையிலே வைரம் தானா அல்லது கிரிஸ்டல் அல்லது கண்ணாடி கற்களை வைத்து ஏமாற்றுகிறார்களா என்று எப்படித் தெரியும்? தற்பொழுது பண்டிகை காலத்தில் பலரும் நகை வாங்கும் முனைப்பில் இருக்கிறார்கள் எனவே நீங்கள் வைர நகைகள் வாங்குவதாக இருந்தால் தூய்மையான வைரம் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

  வைர நகை வாங்கும்போது, எந்த அடிப்படையில் வைரம் மதிப்பீடு செய்யப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  பொதுவாக இன்று தங்கத்தின் விலை என்ன, 22 கேரட் தங்கத்தின் விலை என்ன, 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்று தேடினால் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை நிர்ணயித்து விட முடியும். ஆனால் வைரத்தின் விலையை தெரிந்துகொள்ள முடியாது. அப்போது வைரத்துக்கு எந்த அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது?

  வைர நகையின் விலை

  வைர நகையாக வாங்கும் பொழுது, அந்த நகையின் விலையில், வைரத்தின் விலையும் வைரம் பாதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தின் விலையும் அடங்கும். பெரும்பாலும் வைரம், தங்க நகையில்தான் பதிக்கப்பட்டிருக்கும். எனவே வைரத்துக்கான விலையும், அது பதிக்கப்பட்டிருக்கும் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்று அதனுடைய விலையும் சேர்த்து வைர நகையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

  ப்லூஸ்டோன் என்ற ஆன்லைன் நகைக்கடை தலைமை விற்பனை மேலாளரான விபின் சர்மா இதைப் பற்றி கூறுகையில் “வைரத்தின் விலையை நிர்ணயம் செய்வதற்கு குறிப்பிட்ட அளவீடு என்று எதுவும் கிடையாது. வைரத்தின் விலை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வைரம் எப்படி எடுக்கப்படுகிறது என்பது அதனுடைய அடிப்படை விலையை நிர்ணயம் செய்யும். அதைத் தவிர்த்து வைரம் வெட்டப்படுவது, பாலிஷ் செய்யப்படுவது மற்றும் அதனுடைய டிசைன், வைரத்திற்கு இருக்கும் டிமாண்ட் ஆகிய அனைத்துமே வைரத்தின் விலையை நிர்ணயம் செய்யும்.

  Read More: ஏர்டெல் vs ஜியோ vs வோடோஃபோன் - தீபாவளி கால அதிரடி ரீசார்ஜ் திட்டங்கள்

  வைரத்தின் தரம்

  ஆங்கிலத்தில் வைரத்தின் தரத்தை 4C என்று கூறுவார்கள். (Cut, Clarity, Color and Carat)

  வைரத்தின் வடிவம் (Cut) – நகையாக பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது நகையில் குறிப்பிட்ட வடிவில் பயன்படுத்துவதற்கு முன்பு, வைரத்தை தேவைக்கேற்றவாறு வெட்டி பாலிஷ் செய்வார்கள். வைரக்கல்லை அழகான வடிவங்களில் வெட்டுவது அதன் அழகை மேம்படுத்தும். வைரத்தை வெட்டுதல் என்பது ஒரு களை! அது எவ்வளவு துல்லியமாக வெட்டப்படுகிறதோ அந்த அளவுக்கு மிக மிக அழகாக இருக்கும்.

  வைரத்தின் கிளாரிட்டி (Clarity) - நிலக்கரி தான் வைரமாக மாறுகிறது என்று அனைவருக்குமே தெரியும். நிலக்கரி வைரமாக மாறுவதற்கு எந்த அளவுக்கு அழுத்தத்தை தாங்குகிறது என்பதன் அடிப்படையில்தான் வைரத்தின் தன்மை இருக்கும். வைரம் தெளிவாக இருக்கிறதா அல்லது மங்கலாக இருக்கிறதா என்பதை தான் வைரத்தின் கிளாரிட்டி என்று கூறுவார்கள்.

  வைரத்தின் நிறம் (Color) – நிறமில்லாத வைரம் முதல் வெளிர் மஞ்சள் வரை பல நிறங்களில் வைரம் இருக்கும். நிறமில்லாத வைரங்கள் நல்ல தரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

  வைரத்தின் எடை (Carat) – வைரத்தின் எடையைக் குறிக்கிறது. 0.2 கிராம் முதல் 200 மில்லிகிராம் வரை என்று ஒரு கேரட் வைரத்தின் எடை என்று அளவிடப்படுகிறது.

  Read More: தீபாவளி முடிஞ்சதும் ட்விஸ்ட்.. விலை ஏறப்போகுது ஸ்மார்ட்போன்.! ஏன் தெரியுமா ?

  வைர நகையின் விலை நிர்ணயம்

  வைரத்தின் விலை, தங்கத்தின் தூய்மை எவ்வளவு, எத்தனை கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலையும், 4Cஇன் அடிப்படையில் வைரத்தின் விலை மற்றும் செய்கூலி, ஜிஎஸ்டி ஆகியவை சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும்.

  பொதுவாக, வைர நகை செய்ய பயன்படுத்தும் தங்கத்தில் 22கேரட் தங்கம் சேர்க்கப்படாது. பெரும்பாலும், 18 கேரட் அல்லது 14 கேரட் தங்கம் தான் சேர்க்கப்படும்.

  வைர நகைக்கான செய்கூலி

  நகைகளைப் பொறுத்தவரை, அதனுடைய வேலைப்பாடுகளைப் பொறுத்து அதற்கு செய்கூலி விதிக்கப்படும். நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட வைர நகைக்கு, ஒரு கிராம் வைர நகை செய்வதற்கு குறைந்தபட்சம் ₹1000 செய்கூலியாக வசூலிக்கப்படும். தினசரி பயன்படுத்தக்கூடிய நகைகளுக்கு அதிகமான செய்கூலியும், அரிதாக பயன்படுத்தக்கூடிய பெரிய அளவு வைர நகைகளுக்கு குறைவான செய்கூலியும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Diamond, Gold