Home /News /business /

10,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய சீனாவின் அலிபாபா நிறுவனம்

10,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய சீனாவின் அலிபாபா நிறுவனம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உலகின் மிகப்பெரிய சீன நிறுவனமான, இ-காமர்ஸ் ஜெயண்ட் அலிபாபா குழுமம் சுமார் 10,000 பணியாளர்களை கடந்த 3 மாதங்க்களில் பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உலகின் மிகப்பெரிய சீன நிறுவனமான, இ-காமர்ஸ் ஜெயண்ட் அலிபாபா குழுமம் சுமார் 10,000 பணியாளர்களை கடந்த 3 மாதங்க்களில் பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

    அதாவது நிறுவனத்தின் ஜூன் மாத நிகர வருவாயில் 50% குறைவு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை என்று பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன. சீனாவில் பொருளாதாரம் மந்தகதி அடைந்து வருவதால் விற்பனை கடும் மந்தமாக உள்ளதால் செலவினங்களைக் குறைக்க 10,000 பேரை சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது அலிபாபா.

    மொத்தமாக தன் பணியாளர்கள் எண்ணிக்கையை 2,45,700 ஆக குறைத்துள்ளது அலிபாபா. நிறுவனத்தின் நிகர வருவாய் ஜூனுடன் முடிந்த காலாண்டில் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்து விட்டதாம்.இது கடந்த ஆண்டில் இரு மடங்கு கூடுதலாக இருந்ததாக அலிபாபா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஜூலை தொடக்கத்தில் ஹாங்காங் பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆக அலிபாபா முயற்சிகள் செய்தது. இதன் மூலம் பெரிய அளவில் சீன முதலீட்டாளர்களை ஈர்த்தது. நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் 2014 செப்டம்பரிலேயே அலிபாபா பங்குகளை வெளியிட்டு லிஸ்ட் ஆனது. நவம்பர் 2019-ல் ஹாங்காங்கில் லிஸ்ட் ஆனது. இதன் மூலம் ஹாங்காங், நியூயார்க் இரண்டிலும் முதன்மை பங்குச்சந்தை லிஸ்ட்டிங் அடைந்த நிறுவனமானது அலிபாபா.

    ஹாங்காங் பங்குச் சந்தையில் அலிபாபா பங்குகளின் விலை 4% அதிகரிப்புடன் தொடங்கியது. ஆனால் இவ்வளவு முதலீட்டு பலாபலன்கள் இருந்தும் அலிபாபா 10,000 பணியாளர்களை நீக்கியது ஏன் என்பதே வர்த்தக உலகின் கேள்வியாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Alibaba, Business, China, E-commerce

    அடுத்த செய்தி