சொந்தமாக வீடு கட்டும் ஆசையுள்ள அனைவரும் தங்களது வீட்டை ஒரு ஆடம்பரமானதாக கட்டமைக்கவே விரும்புவார்கள். ஆடம்பரம் என்ற வார்த்தை வந்துவிட்டாலே, அதில் அதிக அளவிலான பணமும் முதலீடு செய்யப்படும். எனவே ஆடம்பர வீடு வாங்கவோ அல்லது கட்டவோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தால், கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியமானது. இடம், பிற இடங்களுக்கான இணைப்பு, வணிக மையத்தின் அருகாமை, முதலீட்டின் மீதான வருவாய் (ROI) திறன் மற்றும் பிராந்திய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கவனிக்கின்றனர்.
ஒரு சொகுசு வீட்டில் முதலீடு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய நான்கு முக்கிய காரணிகள் பற்றி கீழே விரிவாக கொடுத்துள்ளோம்...
1. வீடு அமைய உள்ள இடம்:
பணக்கார வர்க்கத்தினரை பொறுத்தவரை கோடிக்கணக்கில் முதலீடு செய்து வாங்க உள்ள சொகுசு வீடு, நல்ல சூழ்நிலை மற்றும் முக்கியமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். ஆடம்பரமான வீட்டின் உள்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் வணிக சூழ்நிலையுடன் கூடிய ஒரு முக்கிய இடத்தில் அமைந்திருக்க வேண்டும். வணிக மையங்கள் மற்றும் விமான நிலையங்களை எளிதில் அணுக கூடிய தொலைவில் அமைந்திருப்பது கூடுதல் பலனாக இருக்கும்.
2. போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகள்:
நகரத்தின் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஆடம்பர வீட்டை வாங்க எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இருப்பினும், ஒரு சொத்தின் ROI சாத்தியக்கூறுகள் பல காரணிகளைச் சார்ந்தது மற்றும் இணைப்பு என்பது முதன்மையான ஒன்றாகும். இணைப்பு என்பது, சொகுசு பங்களா அமைந்துள்ள இடம் நவீனமான நெடுஞ்சாலை, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம், மற்றும் மெட்ரோ நிலையங்கள் ஆகியவை எளிதில் அணுக கூடிய வகையில் இருக்க வேண்டும். நகரின் முக்கியமான பகுதியில், அனைத்து இணைப்பு வசதிகளும் கொண்ட இடத்தில் கிடைக்கும் வீடானது மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே
3. முதலீட்டின் இலக்கு:
ஆடம்பரமான வீட்டின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே சொகுசு வீடு வாங்கும் முன்பு முதலீட்டாளர்களிடம் அதற்கான நோக்கம் சரியாக இருக்க வேண்டும். ஆடம்பரமான வீட்டை சொந்த பயன்பாட்டிற்காக வாங்குகிறீர்களா? அல்லது வாடகைக்கு விடப்போகிறீர்களா? என்பது குறித்த தெளிவு இருக்க வேண்டும். தொழிலுக்காக வாங்கப்பட்டால், சமூக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் போன்ற காரணிகள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும், ஏனெனில் இது குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக பாதிக்கும். வாடகை நோக்கங்களுக்காக சொத்து வாங்கப்பட்டால், அது வணிக மையங்களுக்கு அருகில் இருக்க வேண்டும் மற்றும் இணைப்பு தடையின்றி இருக்க வேண்டும்.
4. நிதி:
ஆடம்பரமான சொகுசு பங்களாவை வாங்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் நிச்சயம் கைவசம் அதிக பணத்தை கொண்டிருப்பார்கள். அதற்காக கவனமாக முதலீடு செய்யாமல் பணத்தை வீணடிக்க முடியாது. முதலீட்டாளர்கள் ஒரு சொத்தை வாங்க போதுமான அளவு பணமிருந்தாலும், குறைந்த வட்டி விகிதம் கொண்ட வங்கி கடன்களை நாடலாம்.
FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?
ஆடம்பரமான வீட்டை வாங்க பணத்தை ஏற்பாடு செய்வது மட்டுமல்ல, அதற்கான விலையை சரியாக விசாரித்து முடிவு செய்வதும் முக்கியமானது. சொகுசு பங்களாவிற்கான சரியான விலையை முடிவு செய்தால், அதன் மூலமாகவும் சில கோடிகளை சேமிக்கலாம். இதற்கு நீங்கள் அப்பகுதியின் ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றி நன்கு அறிந்திருப்பதோடு, நன்றாக பேரம் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.