Home /News /business /

பட்ஜெட் எதிரொலி: தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்

பட்ஜெட் எதிரொலி: தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்

.

.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, பட்ஜெட்டில், செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது, பங்குச்சந்தை சார்ந்த அறிவிப்புகள் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

  • 1 minute read
  • Last Updated :
மத்திய பட்ஜெட் வெளியான பிறகு, கடந்த 2 வர்த்தக தினங்களில் மட்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதீத சரிவை சந்தித்துள்ளன. 2019ம் ஆண்டில், முதன்முறையாக சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 200 புள்ளிகளுக்கு மேலும் சரிந்தது.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. கடந்த 2 வர்த்தக தினங்களில் இந்திய பங்குச்சந்தைகள் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் அன்றைய தினம் சரிவை சந்தித்தன.

இந்நிலையில், பட்ஜெட்டின் தாக்கம் இன்றும் இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 38720 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 253 புள்ளிகள் சரிந்து 11558 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தையின் இந்த 2 நாள் சரிவு, முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, பட்ஜெட்டில், செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது, பங்குச்சந்தை சார்ந்த அறிவிப்புகள் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Published by:Yuvaraj V
First published:

Tags: Union Budget 2019

அடுத்த செய்தி