மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்யை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பான பல எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளன. கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்ப்புகள்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகித பங்களிப்பை ரியல் எஸ்டேட் துறை வழங்கி வருகிறது. 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு இத்துறையில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், புதிய projects பெரிய அளவில் தொடங்கப்படவில்லை. கட்டுமானத்திற்கு தேவைப்படும் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பதம் துகார், தலைவர், கிரெடாய்(இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு- சென்னை நிறுவனம்) கூறியதாவது, வீட்டு உரிமையாளர்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமான வரி சலுகைகளின் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது வீடு வாங்கக்கூடியவர்களுக்கு வரிச்சலுகைகளை அனுமதித்தால் முதலீடுகள் அதிகரிக்கும்.
அதேபோல், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளீட்டு வரிக் கடனை மீண்டும் கொண்டுவரும் வகையில் ஜிஎஸ்டியின் சீர்திருத்தம் வேண்டும். இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் கணிசமான அளவில் குறைவதோடு, வீடுகளின் விலையும் குறையும். பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மாநில செயலாளர் ராம பிரபு கூறுகையில், "அனைவருக்கும் வீட்டுவசதி இலக்கை அடைவதற்கான முதன்மை திட்டத்தின் செலவினங்களை மேம்படுத்த வேண்டும்.
Also read... இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
வங்கிகளுக்கு அரசு தேவையான உதவிகளை செய்வதோடு, கட்டுமான துறையை சார்ந்து சிறு முதலீட்டார்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய வேண்டும்", என்றார்
மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பதற்கான அம்சங்கள் இருந்தால் வீடு விற்பனை உயர்ந்து இத்துறை மீண்டும் புத்துயிர் பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.