ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2023 : நடுத்தர மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!

பட்ஜெட் 2023 : நடுத்தர மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!

நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீதாராமன் 2023-24 காண யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி செலுத்துவதின் அளவுகோலை அதிகரித்து நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையாக அவரின் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற உள்ள யூனியன் பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரி கொள்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வரி விகிதம் குறைக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.இந்தியாவில் நிதியாண்டு 21-ல் புதுவித வருமான வரி கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. 5%,10%,15%, 20%, 25% மற்றும் 30& என்ற முறையில் அவரவர் வருமானத்திர்கேற்ப வரி விதிக்கபடுகிறது.

தற்போது கசிந்துள்ள தகவலின் படி புதிய வரி விதிப்பில் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 2.5-5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. இதுவே 5-7.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட உள்ளது. 7.5 - 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 15 சதவீதமும் 10 லிருந்து 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். 12.5 - 15 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கும் 25 சதவீதமும், 15 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீதமும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

அந்தந்த தனிப்பட்ட நபர்களே எந்த வரி விதிப்பின் கீழ் தாங்கள் ஒரு வரி செலுத்த உள்ளனர் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி செலுத்துவதின் அளவுகோலை அதிகரித்து நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையாக அவரின் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், நடுத்தர மக்களின் வாழ்வில் உள்ள கஷ்டங்களைப் பற்றி நான்கு அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “நானும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவள் தான், அவர்களுக்கு என்ன விதமான பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால், என்னை நடுத்தர மக்களோடு ஒப்பிட்டு பார்த்து, அதற்கேற்ற வகையில் பணியாற்றி வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனாலும் வருமான வரி பற்றி பிரதமர் தான் கடைசியாக முடிவு எடுக்க வேண்டும். தற்போது வரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Union Budget 2023