ஹோம் /நியூஸ் /வணிகம் /

Budget 2023 : பட்ஜெட் எப்படி தயார் செய்யப்படுகிறது? தேதி, நேரம் குறித்த முழு விவரம்

Budget 2023 : பட்ஜெட் எப்படி தயார் செய்யப்படுகிறது? தேதி, நேரம் குறித்த முழு விவரம்

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023

Budget 2023 : இந்தியாவில் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பணவீக்க பிரச்சினை, ரஷியா - உக்ரைன் போர் காரணமாக எழுந்துள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேசமயம் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட உள்ள இறுதியான முழு பட்ஜெட் இதுதான். ஆக, பொருளாதார வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. பட்ஜெட் என்றாலே கொள்கை மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவற்றை நீங்கள் தவறவிட விரும்ப மாட்டீர்கள். ஆக, பட்ஜெட் தேதி, நேரம், நேரலை போன்ற முக்கிய கேள்விகளுக்கான விடை இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் 2023 எப்போது தாக்கல் செய்யப்படும்? :  பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்வு அன்றைய தினம் 11 மணிக்கு தொடங்க உள்ளது. பட்ஜெட் தாக்கலின் நேரலை காட்சிகளை லோக் சபா டிவி, ராஜ்ய சபா டிவி, டிடி நியூஸ் மற்றும் இதர செய்தி சானல்களில் நீங்கள் பார்க்கலாம். அதேபோல, லோக் சபா டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப், டிவிட்டர் சானல்களிலும் இதை நீங்கள் பார்க்கலாம். தூர்தர்ஷனிலும் பட்ஜெட் உரை ஒளிபரப்பாகும்.

முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டது

இந்தியாவில் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், கிழக்கு இந்திய நிறுவனத்தின் அரசியல் நிர்வாகிகளில் ஒருவருமான ஜேம்ஸ் வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனினும், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் சண்முகம் ஷெட்டி தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்பவர் யார்? எவ்வளவு நேரம்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 2020 - 21 நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு உரையாற்றினார். 2019ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் உரையாற்றினார்.

பட்ஜெட் எப்படி தயார் செய்யப்படுகிறது?

முதலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியோருக்கு எதிர்வரும் ஆண்டுக்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசின் நிதி அமைச்சகம் சுற்றறிக்கையை அனுப்பி வைக்கும். அதன் பிறகு கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இது மட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய், செலவினங்கள் உள்ளிட்டவற்றையும் பட்டியலிடுவார்கள். இதைத் தொடர்ந்து, பல தரப்பிலும் இருந்து வரப்பெற்ற ஆலோசனைகளை பரிசீலனை செய்து பட்ஜெட்டை நிதியமைச்சகம் தயார் செய்யும். இதில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் பிரதமரிடம் ஆலோசனை கேட்பார்கள்.

இந்நிலையில், நிதியமைச்சர் சார்பில் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். இவையெல்லாம் முடிந்த பிறகு கோரிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதியாக பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான உரைகள் அச்சிடப்படும்.

First published:

Tags: Nirmala Seetharaman, Union Budget 2023