ஜனவரி தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களின் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வரி தொடர்பான பெரிய மாற்றங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. இந்நிலையில் 2023 பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேப் -களை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது அமைப்பில் 5 வரி அடுக்குகள் உள்ளன. இதில், 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. 2.5 முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படும். ஆனால் 5 லட்சத்திற்குள் வருமானம் இருந்தால் இந்த வரி தள்ளுபடி ஆகிவிடும்.
5 முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், 10 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 30% வரியும், 20 லட்சத்துக்கு மேல் வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் இந்த ஸ்லாப்களில் அரசு மேலும் ஒரு புதிய ஸ்லாப்பை சேர்க்கக்கூடும்.
ஒருவேளை இந்த பட்ஜெட்டில் மாற்றம் ஏற்பட்டால் 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக இந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு நிறைவேறும் என்று நம்புகின்றனர். இந்த முறை நடுத்தர மக்களுக்கு பெரிய நம்பையை வழங்கக் கூடும் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உள்ள வருமான வரி விதிகளின் படி 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிகிதம் 2023 பட்ஜெட்டில் 10 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனுடன், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் 30 சதவீத வரியையும் 25 சதவீதமாக அரசாங்கம் குறைக்கலாம். அதற்கு மேல் உள்ள வருமான வரம்புக்கு வரியில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.
வரிவிதிப்பில் மாற்றம் ஏற்பட்டால் அதன் மூலம் பலன் பெரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் இந்த மாற்ற செய்திக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். அனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மற்றம் ஏற்படாத நிலையில் இந்த மாத இறுதியில் முடிவு தெரிந்துவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax