நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராக கொண்டுள்ள வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய நிவாரணத்தை அறிவித்துள்ளார். செக்ஷன் 80டிடி (Section 80DD) ஆனது மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு காப்பீட்டுக் கொள்கைக்காக செலுத்தப்படும் எந்த தொகைக்கும் விலக்கு கோர அனுமதிக்கிறது. அத்தகைய நபர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் (கார்டியன்) இந்த வரிச் சலுகைக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்த சலுகை சில நிபந்தனைகளுடன் அணுக கிடைத்தது, தற்போது அவை தளர்த்தப்பட்டுள்ளன. வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் வெளிவந்துள்ள இந்த முக்கிய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் இதன் நன்மைகளை பற்றி மேற்குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் (கேர் டேக்கர்ஸ்) மேலும் புரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
நிதி அமைச்சர் தளர்த்தியுள்ள செக்ஷன் 80டிடி வரிச் சலுகையைப் பெறுவதற்கான முக்கிய நிபந்தனை என்ன?
முன்னதாக, இத்தகைய காப்பீட்டுக் கொள்கையானது மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக கொண்டு இருப்பவர்களுக்கு மொத்தத் தொகையாகவோ அல்லது வருடாந்திரமாக, வழக்கமான வருமானமாகவோ வந்து சேரும். ஆனால் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு, அவர்களை சார்புடையவர் தொகையைப் பெற்றால் மட்டுமே வரிச் சலுகை அனுமதிக்கப்படும். அதாவது, மாற்றுத்திறனாளிகள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு முன்பாக இறந்துவிட்டால், அது பிரீமியம் பெயிட் ஆக கருதப்படாமல் பாலிசி ஹோல்டரின் வருமானமாகக் கருதப்பட்டு, வருமானம் பெறப்படும் ஆண்டில் வரி விதிக்கப்படும். 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 2022 இந்த விதியை தளர்த்தியுள்ளது. ஆனால் இப்போது, பெற்றோரின் வாழ்நாளின் போதே இந்த நன்மை அனுக கிடைக்கும், ஆனால் அவர்களுக்கு 60 வயது ஆன பிறகே வரிச் சலுகை அனுமதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
செக்ஷன் 80டிடி - ஏன் மிகவும் முக்கியம்?
செக்ஷன் 80டிடி என்பது வரி செலுத்துவோர் - அதாவது பெற்றோர் அல்லது பிற கார்டியன்கள் - மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக கொண்டிருந்தால், அவர்களின் மருத்துவ சிகிச்சை, பயிற்சி மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வதற்காக நிவாரணம் அளிக்கும் ஒரு செக்ஷன் ஆகும். கார்டியனின் கீழ் மனைவி, குழந்தைகள், பெற்றோர், சகோதர - சகோதரிகளும் அடங்குவர்.
இதையும் படிங்க.. LICக்கு இப்படியொரு பெருமையா? ஆய்வறிக்கை வெளியீடு!
மாற்றுத் திறனாளி ஒருவர் என்னென்ன வரிச் சலுகைகளை கோரலாம்?
செக்ஷன் 80டிடி என்பது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கானது, அதே சமயம் செக்ஷன் 80யு (Section 80U) மாற்றுத்திறனாளிகளுக்கே பொருந்தும். இதன் விதிகள் ஒத்தவை. உங்கள் குறைபாடுகளுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு நீங்கள் செலவு செய்தால், ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை விலக்கு கோரலாம். அதாவது, செக்ஷன் 80டிடியைப் போலவே, மாற்றுத்திறன் 40 சதவீதத்திற்கு மேல் இருந்தால், விலக்கு வரம்பு ரூ.75,000 ஆக இருக்கும். கடுமையான குறைபாடுகள் உள்ளவர்கள் (மாற்றுத்திறன் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்) ரூ.1.25 லட்ச ரூபாய் வரை பிடித்தம் பெறத் தகுதியுடையவர்கள்.
குறிப்பிட்டுள்ள விலக்கு வரம்பை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ செலவழித்தால் என்ன செய்வது?
எப்போதுமே உண்மையான செலவுகள் கணக்கிடப்படாது. "இது ஒரு 'பிளாட்' ஆன விலக்கு ஆகும் மற்றும் செலவழித்த உண்மையான தொகையைச் சார்ந்தது அல்ல. மாற்றுத்திறன் கொண்ட நபரின் பராமரிப்பானது முழுமையாகவோ அல்லது பிரதானமாகவோ வரி செலுத்துபவரைச் சார்ந்து இருக்க வேண்டும் மற்றும் பிரிவு 80யு-வின் கீழ் இயலாமைக்கான விலக்குகளை தனித்தனியாக கோரக்கூடாது," என்கிறார் வரி ஆலோசனை நிறுவனமான ஆர்எஸ்எம் இந்தியாவின் (RSM India) நிறுவனர் சுரேஷ் சுரானா.
எனவே, மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினராக கொண்ட தனிநபர் அல்லது பாதுகாவலர் செய்யும் உண்மையான செலவுகள் குறிப்பிட்ட வரம்பை மீறாவிட்டாலும், அவர்கள் ரூ.75,000 அல்லது ரூ.1.25 லட்சத்தை விலக்காகக் கோரலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget friendly, Union Budget 2022