Home /News /business /

Union Budget 2022: தனியார் மயம், அரசு முதலீடுகள் விலக்கல், பொதுத்துறை வங்கிகள் மீதான அறிவிப்புகள்- பட்ஜெட் 2022-ன் சந்தை எதிர்பார்ப்புகள்

Union Budget 2022: தனியார் மயம், அரசு முதலீடுகள் விலக்கல், பொதுத்துறை வங்கிகள் மீதான அறிவிப்புகள்- பட்ஜெட் 2022-ன் சந்தை எதிர்பார்ப்புகள்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வருவாயைப் பெருக்க பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் மீது வரி உயர்த்தப்பட வேண்டும், ஆனால் வெளிநாட்டு இந்தியர்கள் இதில் முதலீடு செய்வதை அதிகரிக்க இந்த வரியே நீக்கப்பட்டாலும் படலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆகவே தனியார் மயம், கார்ப்பரேட் வரிச்சலுகைகள் தொடர்வதுடன் சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்றாலும் விவசாயத்துறைக்கு சிலபல கூடுதல் சலுகைகள் சாத்தியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    Bகொரோனா பரவல் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவுகள் கவனம் பெறும் பட்ஜெட்டாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இருக்கும் என்பதால் அரசு செலவினங்களை சமாளிக்கவும், நிதிச்சுமையைக் குறைக்கவும் அரசின் பங்குகளை விற்பனை செய்வது, பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் முதலீடுகளை வாபஸ் பெறுவது, சுருக்கமாக தனியார் மயத்திற்கான அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சமத்துவமின்மை அதிகரிப்பால் ஏழ்மையில் வீழ்ந்த மக்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரி்துள்ளதாக சமீபத்தில் ஆஃக்ஸ்பாம் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆதலால், ஏழ்மையிலிருந்து மக்களை மீட்கும் வகையில் திட்டங்கள், வசதிபடைத்தவர்களுக்கு புதிய வரி விதிப்பது பற்றி அறிவிப்பு இருந்தால் அது பெரிய வரவேற்பை பெறும் ஆனால் வரிச்சுமையை வசதிபடைத்தவர்களிடமிருந்து பெற்றுக் குறைக்கும் முடிவை அரசு எடுக்காது என்றே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பிப்ரவரி 1 ஆம் தேதி அரசாங்கம் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களை அளவிடுதல் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை கொண்டு வருவது பற்றிய அறிவிப்பு போன்றவற்றிற்கான தெளிவான சாலை வரைபடத்தை தலால் ஸ்ட்ரீட் எதிர்பார்க்கிறது.

    இந்தியாவின் டாப்லைன் குறியீடுகளில் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) துறை அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் சிறப்பாகச் செயல்படும் விருப்பங்களில் இந்தப் பிரிவும் உள்ளது.

    ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது பற்றி கூறுகையில், “PSU வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த திட்டத் தெளிவு தேவை. இது போன்ற எந்த அறிவிப்பும் சாதகமானதாக இருக்கும், குறிப்பாக கீழ் அடுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு. மூலதன முதலீடு சாத்தியமில்லை” என்று கூறியுள்ளது.

    பல பொதுத்துறை வங்கிகளில் இருந்து விலகுவதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு சில நிதிபலத்துக்காக வங்கிகளை மட்டும் தன்னுடன் வைத்திருக்க அரசு விரும்புகிறது. எந்தவொரு முதலீடு விலக்கலும் பொதுத்துறை வங்கி பங்குகளை மறுமதிப்பீடு செய்ய வழிவகுக்கும்.

    வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCகள்) சில பணப்புழக்கத் திட்டங்களின் தொடர்ச்சியையும், அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தை தொடர்வதையும் இந்தத் தொழில்துறை எதிர்பார்க்கிறது,UNi இது வீட்டு நிதி நிறுவனங்களுக்குப் பயனளிக்கும்.

    5 மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடந்தாலும் அதில் வாக்காளர்களைக் கவர்வதற்காக பெரிதாக எந்தத்திட்டங்களும் இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக இந்தியாவின் கடன்பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், என்ஆர்ஐ ஆகியோரின் முதலீட்டை ஈர்க்க வரிச்சலுகை, திட்டங்களை அறிவிக்கலாம்.

    வருவாயைப் பெருக்க பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் மீது வரி உயர்த்தப்பட வேண்டும், ஆனால் வெளிநாட்டு இந்தியர்கள் இதில் முதலீடு செய்வதை அதிகரிக்க இந்த வரியே நீக்கப்பட்டாலும் படலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆகவே தனியார் மயம், கார்ப்பரேட் வரிச்சலுகைகள் தொடர்வதுடன் சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்றாலும் விவசாயத்துறைக்கு சிலபல கூடுதல் சலுகைகள் சாத்தியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2022

    அடுத்த செய்தி