ஹோம் /நியூஸ் /வணிகம் /

Budget 2022 : முதலீட்டாளர்களின் இரண்டு பெரிய அச்சங்கள் நீக்கிய பட்ஜெட்

Budget 2022 : முதலீட்டாளர்களின் இரண்டு பெரிய அச்சங்கள் நீக்கிய பட்ஜெட்

பட்ஜெட்

பட்ஜெட்

Budget 2022 : 2022-2023ம் ஆண்டிற்கான நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் முதலீட்டாளர்களின் இரண்டு பெரிய அச்சங்கள் நீங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வருமான வரிச் சட்டப்பிரிவுய் 80சி, சம்பளம் பெறும் நபர்களுக்கு வரிச் சலுகைகளை சம்பள வருவாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்க வழி வகை செய்கிறது. இந்த வரி விலக்கு கடைசியாக 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டிலும் உயர்த்தப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2022-2023ம் ஆண்டிற்கான நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் முதலீட்டாளர்களின் இரண்டு பெரிய அச்சங்கள் நீங்கியுள்ளது. ஒன்று, புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாதது, மற்றொன்று கூடுதல் கட்டண உயர்வுகள் எதுவும் இல்லை. இதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் சொத்து, பட்டியலிடப்படாத பங்குகள் மற்றும் பிற மூலதன சொத்துக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. மூலதன சொத்துக்களில் இருந்து எல்டிசிஜி மீதான கூடுதல் கட்டணம் 15 சதவீதமாக இருக்க முன்மொழியப்பட்டுள்ளது. 2 கோடிக்கு மேல் வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு இது தற்போது 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 37 சதவீதமாகவும் உள்ளது.

டிஜிட்டல் சொத்துக்கு வரி:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த போது, கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrency) மற்றும் NFT உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகளை (Digital Assets) மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் கிரிப்டோகரன்சிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு தடை செய்யும் என்ற நிலை மாறியுள்ளது. இந்த வளர்ந்து வரும் டிஜிட்டல் சொத்து மதிப்பிற்கு வரி செலுத்துவதன் மூலமாக கிரிப்டோஸ் மீதான நிச்சயமற்ற தன்மையை நீக்கி சட்டபூர்வமாக வழிவகை செய்கிறது.

இதையும் படியுங்கள் : லதா மங்கேஷ்கர் மறைவுக்கு 7 மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிப்பு...

அதேபோல் ரிசர்வ் வங்கி விரைவில் டிஜிட்டல் நாணயத்தை கொண்டு வர உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது. இது டிஜிட்டல் கரன்சிகளை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதை காட்டுகிறது. ஆனால் கிரிப்டோ கரன்சிகள் என்பவை சட்டப்பூர்வமாக்கபடாதவை, ஆனால் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் கரன்சி அரசின் அங்கீகாரம் பெற்றது என்பதால் பாதுகாப்பானது ஆகும்.

வரி விலக்கு இல்லை:

2022 -23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாதது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடருகிறது.

இதையும் படியுங்கள் : நாட்டிலேயே முதல் முறையாக அசாமில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முழுமையாக நீக்கம்... மாநில அரசு அறிவிப்பு

ரூ.2.5 லட்சத்துக்கு மேலும், ரூ.15 லட்சத்துக்கு மேலும் தற்போது விதிக்கப்படும் வரி சதவீதம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக நீடிக்கிறது. பிரிவு 80C முதலீட்டு வரம்பு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2014ம் ஆண்டு கடைசியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது, அப்போதிலிருந்து ரூ. 1.5 லட்சமாக மாறாமல் உள்ளது.

கடந்த முறை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டைப் போலவே இந்த முறையும், தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார். 25,000 க்கும் மேற்பட்ட இணக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தின் கீழ் மாநில பதிவு தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Union Budget 2022