Home /News /business /

Union Budget 2022: மத்திய பட்ஜெட்டை தயாரித்த ஐவர் குழு: யார் இவர்கள்?

Union Budget 2022: மத்திய பட்ஜெட்டை தயாரித்த ஐவர் குழு: யார் இவர்கள்?

பட்ஜெட்

பட்ஜெட்

டிவி சோமநாதன், தருண் பஜாஜ், தேபாஷிஷ் பாண்டா, அஜய் சேத் மற்றும் துஹின் காந்தா பாண்டே ஆகிய ஐந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சீதாராமனின் குழு, ஒவ்வொரு நிதியாண்டின் போதும் வெவ்வேறு துறைகளுக்குத் தொகை எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

மேலும் படிக்கவும் ...
    2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.  பட்ஜெட் தயாரிப்பதில் நிர்மலா சீதாராமனை தாண்டி அவரது முதன்மை குழுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    டிவி சோமநாதன், தருண் பஜாஜ், தேபாஷிஷ் பாண்டா, அஜய் சேத் மற்றும் துஹின் காந்தா பாண்டே ஆகிய ஐந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சீதாராமனின் குழு, ஒவ்வொரு நிதியாண்டின் போதும் வெவ்வேறு துறைகளுக்குத் தொகை எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2022 பட்ஜெட்டிலும் இந்த குழுவின் செயல்பாடு இருந்துள்ளது.

    டிவி சோமநாதன்: தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த இவர்  1987ல் ஐஏஎஸ் அதிகாரினார். இதற்கு முன்பு 2015ல் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். ஐவரில் மூத்த அதிகாரி இவர்தான். நிதி செயலாளர் அந்தஸ்தில் உள்ள டிவி சோமநாதன், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு மத்தில்  வளர்ச்சியை உறுதிப்படுத்த மூலதனச் செலவினங்களில் அதிக செலவு செய்ய அமைச்சகத்தை முன்னெடுத்து வருகிறார். மத்திய பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த நிதியாண்டில் மூலதனச் செலவுகள் எவ்வாறு செலவிடப்படும் என்பதை சோமநாதன் எப்படிக் கணக்கிடுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

    தருண் பஜாஜ்: நிதியமைச்சகத்தின் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், பிரதமர் அலுவலகத்திலிருந்து பணியமர்த்தப்பட்ட மற்றொருவர். நிதி அமைச்சகத்தில் அவரது பங்கு யதார்த்தமான வரி இலக்குகளை உறுதி செய்வதாகும். கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது ஹெல்த்கேர் பேக்கேஜ்களை எளிதாக்குவதில் பஜாஜ் முக்கிய பங்கு வகித்தார்.  2022 பட்ஜெட்டின் போது, அவர் வரி இணக்கங்களை எளிதாக்குவார் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் துறைகளுக்கான சலுகைகள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜய் சேத்:  . ஏப்ரல் 2021 இல் பொருளாதார விவகாரச் செயலாளராகச் சேருவதற்கு முன்புபெங்களூரு மெட்ரோவின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார் அஜய் சேத். மிகவும் கூச்ச சுபாவமுள்ள அதிகாரியான இவர் நிர்மலா சீதாராமனின் அனைத்து பட்ஜெட் உரைகளையும் சோமநாதனுடன் சேர்ந்து உருவாக்கும் பொறுப்பில் இருப்பவர்.   பட்ஜெட் 2022 உரையின் உருவாக்கத்திலும் அவரது பங்கு உள்ளதுமூலதனச் சந்தை, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான கொள்கைகளுக்கான முக்கிய துறையும் அவருடைய துறையாகும். வருமானம் ஈட்டவும் வேலைகளை உருவாக்கவும் பெரிய திட்டங்களில் அவர் பெரிய தொகையை ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேபாஷிஷ் பாண்டா: 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தேபாஷிஷ் பாண்டா, நிதிச் சேவைத் துறைத் தலைவராக, பொதுத்துறை அலுவலகங்களின் மறுமலர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறார். பெருந்தொற்று காலத்திலும்  வங்கிகள் சிறப்பாக செயல்பட்டதற்கு பின்னால் இவரது பங்களிப்பும் உள்ளது. , மேலும் பட்ஜெட்டின் போது பாண்டா இதை  மேலும் எளிதாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    துஹின் காந்தா பாண்டே: இந்த ஆண்டு, அரசாங்கம்  பங்கு விலக்கலில் (Disinvestment) அதன் இலக்குகளை அடையாமல் போகலாம், ஆனால் ஏர் இந்தியாவின் பங்கு விலக்கலில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்கு வகித்துள்ளார். 2022 பட்ஜெட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு இன்னும் பல திட்டங்களை அவர் வரிசைப்படுத்தியுள்ளார். இதில் முதன்மையானது பொது பங்கு வெளியீடு மூலம் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வது.  DIPAM இன் செயலாளரான பாண்டே, அரசாங்கத்தின் பங்கு விலக்கு திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2022

    அடுத்த செய்தி