Home /News /business /

Budget 2022: ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்!

Budget 2022: ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் புதிதாக 200 டிவி சேனல்கள்!

Budget 2022| PM eVIDYA | இணைய வசதி இல்லாதவர்களுக்கு ரேடியோ மற்றும் டிடிஎச் சேனல்கள் மூலம் கல்வி வழங்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தால் 'ஒரு வகுப்பு, ஒரு தொலைக்காட்சி' திட்டம் தொடங்கப்பட்டது.

    PM eVIDYA திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு, ஒரு தொலைக்காட்சி திட்டம் மூலம் 1 - 12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

    2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    நாடாளுமன்றத்தில் பட்ஜட்டை தாக்கல் செய்த பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது, PM eVIDYA திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு, ஒரு தொலைக்காட்சி திட்டம் 12 தொலைக்காட்சி சேனல்களில் இருந்து மொத்தம் 200 சேனல்களாக விரிவுபடுத்தப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு வருட காலமாக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், 1-12 வகுப்புக்கு வரையிலான மாணவர்களுக்கான பாடங்களை மாநில மொழிகளில் வழங்க இந்த சேனல்கள் உதவும். இணைய வசதி இல்லாதவர்களுக்கு ரேடியோ மற்றும் டிடிஎச் சேனல்கள் மூலம் கல்வி வழங்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தால் 'ஒரு வகுப்பு, ஒரு தொலைக்காட்சி' திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த ஒரு வகுப்பு - ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் புதிதாக 200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்குவதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்விமுறை அறிமுகப்படுத்தப்படும்.

    டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். சிறு குழந்தைகள் நலனுக்காக, நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.60 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Published by:Esakki Raja
    First published:

    Tags: Union Budget 2022

    அடுத்த செய்தி