மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது இன்று, மத்திய ரிசர்வ் வங்கி (RBI) 2022-23 ஆம் ஆண்டில் டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அறிமுகப்படுத்தும் என்று கூறினார், இது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் நாணயம் குறித்த குறித்த மத்திய அரசின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.
டிஜிட்டல் கரன்சியின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். தனியார் டிஜிட்டல் கரன்சிகளை அனுமதிக்கும் யோசனைக்கு மத்திய வங்கி எதிராக இருக்கும் போது, மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.
ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும் என்று நிதியமைச்சர் அறிவித்தது மற்றும் மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சியின் அறிமுகம், அதன் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் கட்டண முறையின் அடிப்படையில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் என்றார்.
டிஜிட்டல் ரூபாய் எப்படி செயல்வடிவம் பெறும்?
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ பணம் ஆகும். இது நாம் தினசரி பயன்படுத்தும் கரன்சியைப் போன்றதே, ஆனால் வடிவம்தான் வேறுபட்டது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பணத்துடன் ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனைக்குரிய பணப்பரிமாற்றமாகவே இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய வங்கியின் டிஜிட்டல் ரூபாய் என்பது நாம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ ரூபாயைப் போன்றதே ஆனால் டிஜிட்டல் வடிவில் இருக்கும்.
CBDC எனும் மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி என்பது நாம் பயன்படுத்தும் காகித கரன்சியின் டிஜிட்டல் வடிவம், இதுவும் பரிவர்த்தனைகளை எளிதாக்கும். ரிசர்வ் வங்கியின் இது குறித்து முன்பே குறிப்பிட்டது போல் இது நாம் பயன்படுத்தும் பணத்திற்கு பாதுகாப்பான, உறுதியான மற்றும் வசதியான மாற்றாக இருக்கும். பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளைப் பொறுத்து, இது நிதிக் கருவியின் சிக்கலான வடிவமாகவும் இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி என்பது கிரிப்டோ கரன்சி அல்ல. இது சட்டப்பூர்வ ரூபாயின் டிஜிட்டல் வடிவமாகும், ஆனால் தனியார் கிரிப்டோ கரன்சிகள் முற்றிலும் வேறுபட்டவை. தனியார் கிரிப்டோ கரன்சிகள் பணம் என்பது பற்றிய இதுவரை இருந்து வரும் கருத்துடன் கணிசமான வேறுபாடுகளைக் கொண்டது. . அவை பண்டங்களோ அல்லது பொருட்களின் மீதான உரிமைகோரல்களோ அல்ல, ஏனெனில் தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு எந்த வித உள்ளார்ந்த மதிப்பும் இல்லை.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.