Home /News /business /

2022-23க்குள் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

2022-23க்குள் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Budget 2022 | பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டத்தின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.

    2022-23க்குள் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

    இதற்காக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாஃபோன் இந்தியா உள்ளிட்ட அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வெவ்வேறு சோதனைகளின் கீழ் தங்கள் 5ஜி நெட்வொர்க்குகளை சோதனை செய்து வருகின்றன. 5G வெளியீட்டிற்கான இறுதி கட்டத்தை அமைக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அரசு விவாதித்து வருகிறது.

    தொடர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்புத் துறைக்கு தனது பரிந்துரைகளை அளித்த பின்பும், 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்னும் நடைபெறாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில், 2022-23க்குள் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்படும்என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம், 5 ஜி சேவை அடுத்த ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும். பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டத்தின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும், மேலும் இத்திட்டம் 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Union Budget 2022

    அடுத்த செய்தி