Budget 2021 Live Updates: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

  • News18 Tamil
  • | February 01, 2021, 11:03 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:24 (IST)

    5 வருடங்களுக்கு ரூ 2.87 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் Jal Jeevan Mission நகர்ப்புற திட்டம் தொடங்கப்படும்
     
    அனைத்து 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தண்ணீர் விநியோகம், 500 அம்ருத் நகரங்களில் 2.86 கோடி வீடுகளில் குழாய் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் மேலாண்மை இதன் மூலம் ஏற்படுத்தப்படும் 

    14:9 (IST)

    சென்னை சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    13:36 (IST)


    2021-22ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை GDP-ல் 6.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், 2020-21ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5% ஆக இருந்ததாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார். 

    13:24 (IST)

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை. 

    13:22 (IST)

    ஜி.எஸ்.டி பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், இந்த செயல்முறையை மேலும் எளிதாக்க அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றார். "காப்பர் ஸ்கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில வாகன பாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும்." என்றும் தெஇவித்தார். 

    13:18 (IST)

    பட்ஜெட் உரை வாசிக்கப் பட்ட நிலையில் மும்பை பங்குச் சந்தை உயர்வு

    13:15 (IST)

    பட்ஜெட்  தாக்கலை தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் குறியீடு 1,445 புள்ளிகள் உயர்ந்து 47,730 ஆக வர்த்தகம், நிப்டி குறியீடு 412 புள்ளிகள் உயர்ந்தது. 

    13:13 (IST)

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை மதியம் 12.50 மணிக்கு முடித்தார். அவர் பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை மக்களவையில் 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார். அப்போது அவர், தனது பட்ஜெட் உரையின் இரண்டு பக்கங்களை மட்டுமே படிக்கவில்லை.