Budget 2021-22: முந்தைய ஆண்டுகளில் பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? மானியங்களுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டும் குறைக்கப்படுமா?

Budget 2021-22:

இந்தியாவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2015-16ம் ஆண்டு, இந்தியாவின் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவிதமாக இருந்தது.

  • Share this:
இந்த ஆண்டு பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டுகளில் சில முக்கிய துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை பார்க்கலாம்.

கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தால், இந்தியாவின் வளர்ச்சி - 24 புள்ளிகள் வரை குறைந்து, மீண்டும் எழ தொடங்கியுள்ளது. இது போன்ற நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு, நிதி ஒதுக்கீடுகள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவின் நிதி பற்றாக்குறை:

இந்தியாவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,  2015-16ம் ஆண்டு, இந்தியாவின் நிதி பற்றாக்குறை  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவிதமாக இருந்தது.  இது கடந்த ஆண்டுகளில் சற்று ஏறக்குறைய இருந்தாலும், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, 7 சதவிதத்திற்கும் மேல் போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Budget 2021-22:


2015-16 3.9 %
2016-17 3.5 %
2018-19 3.4 %
2020-21 3.8 %
2021-22 7 % **

எளிமையாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா:

எளிமையாக தொழில் தொடங்க அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில், 2014ம் ஆண்டு 142வது இடத்தில் இருந்த இந்தியா, 2020ம் ஆண்டில் 63ம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு துறை சார்ந்தவர்கள், தொழில் செய்வதில் இருந்த கஷ்டங்கள் நீங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

2014 142
2016 130
2017 100
2018 77
2020 63

மத்திய பட்ஜெட் அளவு:

2014-15ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் மொத்த அளவு, 17.94 லட்சம் கோடி, இது படிப்படியாக அதிகரித்து 2020-21ம் ஆண்டில் 30.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  6 ஆண்டுகளின் பட்ஜெட்டின் அளவு ஏறக்குறைய 12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

2014-15 17.94 லட்சம் கோடி
2015-16 17.77 லட்சம் கோடி
2016-17 19.78 லட்சம் கோடி
2017-18 21.47 லட்சம் கோடி
2018-19 24.42 லட்சம் கோடி
2020-21 30.42 லட்சம் கோடி

விவசாயம்: 

விவசாயத்துறைக்கு 2015-16ம் ஆண்டு 22,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில், 57, 600 கோடியாக அதிகரித்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான பட்ஜெட்டில், வேளாண்துறைக்கு சுமார் 2.83 லட்சம் கோடியை ஓதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

 

Budget 2021-22:


2015-16 22,958 கோடி
2016-17 35,984 கோடி
2017-18 44,486  கோடி
2018-19` 57,600 கோடி

2020-21 2.83 லட்சம் கோடி

ராணுவம்:

பாதுகாப்பு துறைக்கு 2014-15ம் ஆண்டு 2.24 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, இது தொடர்ந்து அதிகரித்து, 2020-21ம் ஆண்டில் 4.71 லட்சம் கோடியாக அதிகரித்தது.

 

Budget 2021-22:


2014-15 2.24 லட்சம் கோடி
2015-16 2.46 லட்சம் கோடி
2016-17 2.58 லட்சம் கோடி
2017-18 2.74 லட்சம் கோடி
2018-19 2.95 லட்சம் கோடி
2020-21 4.71 லட்சம் கோடி

கல்வி:

கல்வி துறையை பொறுத்தவரை 2015-16ம் ஆண்டு  68, 963 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில், 99,300 கோடியாக அதிகரித்தது.

2015-16 68,963 கோடி
2016-17 72,394 கோடி
2017-18 81,868 கோடி
2018-19 85,010 கோடி

2020-21 99,300 கோடி

ரயில்வே துறை:

ரயில்வே துறைக்கு 2015-16ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2018-19ல் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. 2020-21 பட்ஜெட்டில் 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2015-16 1 லட்சம் கோடி
2016-17 1,21,000 கோடி
2017-18 1,31,000 கோடி
2018-19 1,48,000 கோடி
2020-21 2,19,413 கோடி

Budget 2021-22:


100 நாள் வேலை திட்ட ஒதுக்கீடு:

100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2014-15ல் 33 ஆயிரம் கோடி ரூபாயாக  இருந்த நிதி ஒதுக்கீடு. 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில், 60 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. பின்னர் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், 2020-21ல் 61,500 கோடியாக மட்டுமே உயர்ந்தது.

2014-15 33,000 கோடி
2015-16 34,699 கோடி
2016-17 38,500 கோடி
2017-18 48,000 கோடி
2018-19 60,000 கோடி
2020-21 61,500 கோடி

மானியங்களுக்கான ஒதுக்கீடு:

ஒவ்வொரு ஆண்டும் மானியங்களுக்கு என்று செலவு செய்யும் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அது குறைக்கப்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது. . 2015-16ம் ஆண்டு மானியங்களுக்கு என்று 2.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, இது 2018-19ம் ஆண்டு 2.60 லட்சம் கோடியாக அதிகரித்தது. பின்னர் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் இது 2.28 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த ஆண்டும் பெரும்பாலான துறைகளில், நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

2015-16 2.27 லட்சம் கோடி
2016-17 2.31 லட்சம் கோடி2017-18 2.40 லட்சம் கோடி
2018-19 2.60 லட்சம் கோடி
2020-21 2.28 லட்சம் கோடி
Published by:Arun
First published: