Home /News /business /

பட்ஜெட்டில் பெண்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

பட்ஜெட்டில் பெண்களுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

சுய உதவிக்குழு

சுய உதவிக்குழு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு பெண்களுக்கு முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் சுய உதவிக் குழுக்களின் கீழ் பல வகையில் ஊக்குவித்து வருகிறது.

    இந்நிலையில், சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் ஒவ்வொருவருக்கும் எந்த ஒரு பிணையும் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு ஜன் தன் சேமிப்பு கணக்குகளில் 5000 ரூபாய் வரை ஓவர் டிராப்ட் சேவை கீழ் கடன் வழங்கப்படும்.

    பெண்கள் தலைமை வகிக்கும் முன்முயற்சிகள் நாட்டில் மேற்கொள்ளப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் பெண்களுக்கானவையாக உள்ளன.

    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Budget 2019, Union Budget 2019, Women

    அடுத்த செய்தி