காங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்த பியுஷ் கோயலுக்கு நன்றி - ப.சிதம்பரம்

பட்ஜெட் 2019-ல் விவசாயிகளுக்குச் சலுகை மற்றும் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு போன்றவையே முக்கியமான அறிவிப்பாக உள்ளது.

news18
Updated: February 1, 2019, 2:24 PM IST
காங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்த பியுஷ் கோயலுக்கு நன்றி - ப.சிதம்பரம்
ப. சிதம்பரம் (கோப்புப் படம்)
news18
Updated: February 1, 2019, 2:24 PM IST
பட்ஜெட் 2019 தாக்கல் செய்யப்பட்டு முடிந்துள்ள நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் இது ‘vote on account' இல்லை வாக்குகளைக் கவருவதற்கான அக்கவுண்ட் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“ஏழைகளுக்கு தான் முன்னுரிமை என்ற காங்கிரஸின் உறுதிமொழியை காப்பி அடித்ததற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சருக்கு நன்றி என்றும், இது ‘vote on account' இல்லை வாக்குகளைக் கவருவதற்கான அக்கவுண்ட்” என்று டிவிட்டரில் பட்ஜெட் குறித்த தனது கருத்தை ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இடைக்காலப் பட்ஜெட் என்பது பொதுவாக ‘vote on account' என்று அழைக்கப்படும். இதன் கீழ் அடுத்த நிதி ஆண்டின் 4 மாதங்களுக்கு மட்டுமே நிதி திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படும். பெரிய வரி சீர் திருத்தங்கள் ஏதும் இருக்காது.

பட்ஜெட் 2019-ல் விவசாயிகளுக்குச் சலுகை மற்றும் வருமான வரி உச்ச வரம்பு உயர்வு போன்றவையே முக்கியமான அறிவிப்பாக உள்ளது.

எனவே இது சாமானியனுக்கான பட்ஜெட் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அய்யாகண்ணு


மறுபக்கம் விவசாயிகள் நாங்கள் 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்தோம். இதில் விவசாய உதவி தொகை மட்டுமே ஆண்டுக்கு 6,000 என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதை வரவேற்கிறோம்.

ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடியைச் செய்யவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்று தென் இந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவருமான அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...