Home /News /business /

பட்ஜெட் 2019: எந்தப் பொருட்களின் விலை குறையும், உயரும்?

பட்ஜெட் 2019: எந்தப் பொருட்களின் விலை குறையும், உயரும்?

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மக்களவையில் தனது முதல் பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ள நிர்மலா சீதாராமன் பல பொருட்களின் சுங்க வரியில் மாற்றம் செய்துள்ளார்.

    எனவே இந்த பட்ஜெட்டின் எதிரொலியாக எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும், குறையும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    விலை உயரும் பொருட்கள்:


    பெட்ரோல், டீசல்:

    பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிய கலால் வரி மற்றும் சிறப்பு வரி திருத்தங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன் படி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் வரை விலை உயரும்.
    தங்கம் மற்றும் வெள்ளி:

    பட்ஜெட்டின் போது தங்கம் மற்றும் பிற விலைமதிப்புள்ள பொருட்கள் மீதான வரியை 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்துவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வது மட்டும் இல்லாமல் கீழே கூறப்படும் பொருட்களின் விலையும் உயரம்.

    - இறக்குமதி கார்கள்
    - ஸ்ப்ளிட் ஏ.சி.
    - ஒலிபெருக்கிகள்
    - டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்கள்
    - இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்கள்
    - சி.சி.டி.வி கேமராக்கள்
    - முந்திரி
    - இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக்
    - சோப்
    - இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்கள்
    - வினைல் தரையையும்

    விலை குறையும் பொருட்கள்:


    - செட்-டாப் பாக்ஸ்
    - மின்சார வாகன பாகங்கள்
    - கேமரா மாட்யூல்
    - மொபைல் போன் சார்ஜர்

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Budget 2019, Union Budget 2019

    அடுத்த செய்தி