வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வரி தள்ளுபடி மட்டுமே!

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் கிடையாது என்றும் வரி தள்ளுபடி தான் என்றும் தெரியவந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பியூஷ் கோயல் 2019-2020 நிதி ஆண்டு முதல் அடிப்படை வருமான வரி விலக்காக உள்ள 2 லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்துகிறோம்.

Tamilarasu J | news18
Updated: February 1, 2019, 7:07 PM IST
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வரி தள்ளுபடி மட்டுமே!
வருமான வரி
Tamilarasu J | news18
Updated: February 1, 2019, 7:07 PM IST
பட்ஜெட் 2019 தாக்கல் செய்த போது வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அது வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் கிடையாது என்றும் வரி தள்ளுபடி தான் என்றும் தெரியவந்துள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பியூஷ் கோயல், 2019-2020 நிதி ஆண்டு முதல் அடிப்படை வருமான வரி விலக்காக உள்ள 2 லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்துகிறோம். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரிச் சதவீதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு மட்டும் வரி தள்ளுபடி கிடைக்கும். அதற்குக் கூடுதல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால் கடைசியாக 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழுமையாக வரி தள்ளுபடியை அறிவித்து 5 பியூஷ் கோயல் கைதட்டல் பெற்றார்.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80சி கீழ் எப்போதும் போன்றே 1.50 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு பெற முடியும். அதே நேரம் வீட்டுக் கடன் மீதான வட்டியில் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெறலாம். முன்பு இது 1.5 லட்சம் ரூபாயாக இருந்தது.

60 வயதுக்குட்பட்ட தனிநபரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்குமேயானால், 5 சதவீத வரி + 4% செஸ் வரியைச் செலுத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால் வரி தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இனி வரி செலுத்துவதில் வரி விலக்கு பெறலாம்.

இதுவே தனிநபர் (மூத்த குடிமக்கள் உட்பட) ஆண்டு வருமானம் 5,00,001 முதல் 10,00,000 ரூபாய் வரை என்றால் 20% வரி + 4% செஸ் வரி செலுத்த வேண்டும்.

மேலும் தனிநபர் (மூத்த குடிமக்கள் உட்பட) ஆண்டு வருமானம் 10,00,001 ரூபாய்க்கும் கூடுதலாக இருந்தால் 30% வரி + 4% செஸ் வரி செலுத்த வேண்டும்.

மேலும் பார்க்க:
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...