Budget 2019: மன்மோகன் சிங் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு மோடி அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

பொதுவாகத் தேர்தலுக்கு முன்பு வரும் இடைக்காலப் பட்ஜெட்டானது ஆட்சியில் உள்ள அரசுக்கு மக்களைக் கவர உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு என்றும் கூறலாம்.

Web Desk | news18
Updated: January 9, 2019, 1:48 PM IST
Budget 2019: மன்மோகன் சிங் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டு மோடி அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: January 9, 2019, 1:48 PM IST
2019 பொதுத் தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி தலைமையிலான நடப்பு அரசின் கடைசிப் பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் வரையிலான தேவைகளுக்கான பட்ஜெட் இது என்பதால் இடைக்காலப் பட்ஜெட் என்று கூறப்படுகிறது.

பொதுவாகத் தேர்தலுக்கு முன்பு வரும் இடைக்காலப் பட்ஜெட்டானது ஆட்சியில் உள்ள அரசுக்கு மக்களைக் கவர உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு என்றும் கூறலாம். பொது மக்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளை, திட்டங்களை வழங்கி மக்களைக் கவருவதுடன் தேர்தலின் போது வாக்குகளை வாங்கிவிடலாம்.

எனவே 2014-ம் ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இருந்தது. தற்போது உள்ள மோடி அரசின் ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்


2014-ம் ஆண்டுத் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் செய்யப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

2014-ம் ஆண்டு இடைக்காலப் பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்தார்.

1. சில மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் மீதான தொழிற்சாலை நுழைவு வரியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பு.
Loading...
2. சிறு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வணிக வாகனங்கள் மீதான கலால் வரியை 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைப்பு.
3. எஸ்யூவி கார்கள் மீதான கலால் வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைப்பு.

4. உள்நாட்டு மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்க இறக்குமதி செய்யப்பட்ட போன் மீதான கலால் வரி அதிகரிப்பு.

5. 2019 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு கல்வி கடன் பெற்ற மாணவர்களின் வட்டி நிறுத்தி வைப்பு. இந்த முடிவால் நாடு முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு.

6. நிர்பையா நிதிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

7. இராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான one rank, one pension (OROP) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் 2,24,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

மேலே சொன்ன அறிவிப்புகள் அனைத்தும் மக்களைக் கவர்ந்ததா? என்று தெரியவில்லை.

திரைப்பட டிக்கெட், கட்டணம், டிவி, விலை, குறையும், மத்திய அரசு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், Movie tickets, TVs, cheaper, govt, cuts, GST rates, several items, GST Council
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

சரி, மோடி அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்...


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 5வது கடைசிப் பட்ஜெட் என்பதால் இது அனைவராலும் கவனிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. ஏமாற்றத்தில் உள்ள விவசாயிகள், அரசு ஊழியர்களை, மக்களைக் கவர அரசு என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது மோடி அரசுக்கு உள்ள மிகப் பெரிய தலைவலி, வேலை வாய்ப்பு உருவாக்குவது மற்றும் விவசாயிகள் நல திட்டங்கள் உள்ளிட்டவை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இதன் மீதான அறிவிப்புகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் வருமான வரி, ஜிஎஸ்டி வரிக் குரைப்பு, வங்கி மறு மூலதனம், நட்டத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல், நிதி பற்றாக்குறை, பணவீக்கம், வணிகங்களை எளிமையாகத் தொடங்கும் விதிகள், ஸ்டார்ட்அப் குறித்த அறிவிப்புகளும் 2019 பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

மேலும் பார்க்க: தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக 10% இட ஒதுக்கீடு கொண்டு வருகிறதா?
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...